Header Ads



மத்திய மாகாண சபையை ஐக்கிய தேசிய கட்சி இலகுவாக கைப்பற்றும் - ஹலீம் எம்.பி.

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாண சபையை ஐக்கிய தேசிய கட்சி இலகுவாக கைப்பற்றும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ.ஹலீம் தெரவித்தார். 2013 8 14 கண்டி கட்டுகஸ்தோட்டை ரிவர் ஸைட் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்ற ஐக்கிய தேசிய கடசியின் பிரச்சாரகி கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் இவ்வாரும் தெரிவித்தார்.

இன்று பொது மக்கள் மத்தியில் தற்போதை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் செயல்கள் சம்பந்தமாக  அதிருப்தியே கானப்படுகிறது. மக்களின் வாழ்க்கை செலவீணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆகவே அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை கான்பிக்க மக்கள் ஆயத்தமாக உள்ளனர். எனவே எதிர்வரும் செப்டெம்பர் 21 ம் திகதி நடைபெறவுள்ள மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி இலகுவாக வெற்றியீட்டும்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை காரணம் காட்டி  ஜனாதிபதிக்கே வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களும் இன்னும் இருக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் கூறுவது இது ஜனாதிபதியை மாற்றும் தேர்தலல்ல. அரசாங்கத்தின் பொடுபோக்குத்தனத்தை கட்டுப் படுத்துவதற்காக ஒரு சமிஞ்சையை கொடுக்கும் தேர்தலாகவே நாங்கள் கருதுகின்றோம்.

எனவே ஐக்கிய தேசிய கட்சயாளர்களது பொருப்பு அரசுக்கு எதிராக உள்ள அனைவரையும் ஒன்று திறட்டி வாக்குச் சாவடிக்கு கொண்டு செல்வதாகும்.என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

1 comment:

  1. இந்தக் குரல் எங்கும் ஒலிக்கட்டும்.!
    முஸ்லீம் சமூகம் தலை நிமிரட்டும்.!!
    அசாத் சாலி..!!!

    ReplyDelete

Powered by Blogger.