கொழும்பில் எதிர்க்கட்சிகளின் பாரிய ஆர்ப்பாட்டம் (படங்கள்)
அரச பயங்கரவாதத்துக்கு எதிராக எதிர்கட்சிகள் இணைந்து இன்று 2013.08.14 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
எதிர்கட்சிகளின் ஐக்கியத்திற்கான இயக்கம் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் 'போதும் போதும்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 'மத தீவிரவாதத்தைக் கண்டிக்கிறோம்' , 'எல்லாப்பிரச்சினைக்கும் பாதுகாப்பு அமைச்சா தீர்வு வழங்குவது? ஏனைய அமைச்சுக்கள் எதற்கு உள்ளன?', 'துப்பாக்கி சூடு நடத்த கட்டளையிட்டது யார்?' 'பாதுகாப்பு படையினரின் வன்முறையை சுதந்திர விசாரணைக்கு உட்படுத்து குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்து', , 'சமாதான விரோத அரசாங்கத்தை துரத்தியடிப்போம்' என்பன போன்ற வாசகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



Why don't you call Island people? We will participate in next.
ReplyDeleteWhy there is no open invitation to all human in SLK against animals in SLK Government.
ReplyDelete