எகிப்தில் இணக்கத்தை ஏற்படுத்த முயற்சி
(Tn) எகிப்தில் தொடரும் அரசியல் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளன. எகிப்து இடைக்கால அரசு, இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்ததாக கூறியதை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசு பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதாக தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தனது இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான முகாமில் இருந்தே நோன்புப் பெருநாளை கொண்டாடினர்
எனினும் சமரச முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் ஆர்ப்பாட்ட முகாம்களை அகற்றிவிடுவதாக எகிப்து அரசு நேற்று முன்தினமும் உறுதியாக கூறியது. ‘ரபா அதவியா மற்றும் நஹ்தா முகாம்களை அகற்ற அமைச்சரவை தீர்மானித்திருக்கிறது. இதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை’ என்று பிரதமர் ஹஸம் அல் பப்லாவி எகிப்து தேசிய தொலைக்காட்சியூடாக குறிப்பிட்டார்.
முர்சி ஆதரவாளர்கள் கெய்ரோவிலுள்ள இரு சதுக்கங்களில் இருந்து மீண்டும் முர்சியை பதவியில் அமர்த்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘உடனடியாக இப்போதே அவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இரத்தம் சிந்துவதை தவிர்க்க எம்முடன் ஒத்துழையுங்கள்’ என்று பப்லாவி தனது உரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எச்சரித்தார். ‘எந்த பாதுகாப்பு தலையீடும் இன்றி புனித நோன்பு காலத்தில் இதற்கு தீர்வு கிடைக்கும் என அரசு பிரார்த்தித்தது. இதன் மூலம் அமைச்சரவையின் முடிவு மீளப் பெறப்படும் என்று அர்த்தம் இல்லை’ என்றும் அவர் கூறினார். முன்னதாக வெளிநாட்டு சமரச முயற்சிகள் தோல்வியடைந்திருந்ததாக இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர் அறிவித்தார். அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் வில்லியம் பேர்ன்ஸ் தனது சமரச முயற்சிகள் தோல்விகண்டு கெய்ரோவிலிருந்து வெளியேறி ஒரு மணி நேரத்தில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார்.
சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பே முழுப் பொறுப்பு என ஜனாதிபதியின் அறிவிப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எனினும் உடன்பாடுகளை எட்டும் முயற்சியாக ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பெர்னட் லியோன் தொடர்ந்தும் கெய்ரோவி தரித்துள்ளார். ஆனால் அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு அறிக்கையில் அபாயகரமான ஸ்தம்பித நிலையை முடிவுக்கு கொண்டுவந்து தீர்வை எட்டுவதற்கான வழியை அனைத்து தரப்பும் தேடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘இது மிக தீர்க்கமான சூழலாகும். இது மேலும் இரத்தம் சிந்தவும் நாட்டை முடக்கவுமே வழி வகுக்கும். அதேபோன்று நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தடங்கலாக இருக்கும். இவை எகிப்தின் வெற்றிகரமான அதிகார மாற்ற செயற்பாடுகளுக்கு தீர்க்கமான அம்சங்களாகும்’ என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைகளுக்கான தலைவர் கதரின் அஷ்டன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. வீதி ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து கடந்த ஜூலை 3 ஆம் திகதி இராணுவ சதிப்புரட்சி மூலம் ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமியவாதிகள் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் முர்சியை மீள பதவி அமர்த்தக் கோரி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முர்சி பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் சுமார் 300 பேரளவில் கொல்லப்பட்டு ள்ளனர். இதில் கடந்த ஜூலை 27 ஆம் திகதி பாதுகாப்பு பிரிவினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 80 முர்சி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதும் உள்ளடங்கும். இந்நிலையில் இடைக்கால அரசின் அச்சுறுத்தல் குறித்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் கிஹாத் அல் ஹதத்திடம் ராய்ட்டர் கேட்டபோது, ‘முன்னரை விடவும் பாரிய படுகொலைக்கு தயாராகி வருவது இதன் மூலம் உறுதியாகிறது. அவர்கள் சாதகமான சமிக்ஞையையே வழங்கியிருக்க வேண்டும். துப்பாக்கி ரவைகளையல்ல’ என்றார்.
அதேபோன்று முர்சி மீள திரும்பும் வரை தாம் வெளியேறப் போவதில்லை என ரபா அல் அதவியா ஆர்ப்பாட்ட முகாமில் இருக்கும் பொறியியலாளரான 56 வயது அவுஸ் அல்திபி குறிப்பிட்டார். ‘எந்த உடன்பாட்டையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. முர்சி திரும்பும்வரை நான் வெளியேறப் போவதில்லை. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உடன்பாட்டுக்கு வந்ததாக அறிவித்தாலும் நான் அதனை ஏற்க மாட்டேன். ஆனால் முர்சி தொலைக் காட்சியில் தோன்றி வெளியேறச் சொன்னால் நான் வெளியேற தயாராக இருக்கிறேன்’ என்றார். இதே கருத்தை வழக்கறிஞரான 31 வயது அஹமட் அபு ஷபாவும் குறிப்பிட்டார்.
‘முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் எந்த முடிவும் இதனுடன் தொடர்பில்லை. எனது வாக்கை அளித்த வாக்குப் பெட்டியே இதனுடன் தொடர்புபட்டது. முர்சி தொலைக்காட்சியில் தோன்றி அவரது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தாலும் நான் ஏற்கமாட்டேன்.
அவர் ரபாவுக்கு வந்து இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தாலே ஏற்றுக்கொள் வேன். அதுவரை உள்நாட்டு யுத்தம் வெடித்தாலும் எனக்கு கவலை இல்லை. நான் எனது சட்ட பூர்வ உரிமைக்காகவே இங்கு இருக்கிறேன்’ என்றார்.
.jpg)
America,Israeil,KSA and UAE must take the responsibility to this violence. because they are the violence maker in the Egypt. we cant accept the interim government at any way. because they are anti muslim activist. how can we agreed with democracy theory of the America and UN? where is the UN democracy policy? all are cheating the world communitty. specially they are planning to eradicate the islame based state. but it is impossible. insa ALLAH islam will controle the world as soon as possible. KSA is in very wrong way. it should correct their big wrong.
ReplyDelete