Header Ads



ஆயுத விமானம் விழுந்தது

சோமாலியா நாட்டில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷகாப் தீவிரவாத இயக்கத்தை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சண்டையில் சோமாலியா ராணுவத்திற்கு எத்தியோப்பியா ராணுவம் உதவி செய்து வருகிறது. அவ்வப்போது ராணுவத்திற்கு தேவையான வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. 

இந்நிலையில், இன்று எத்தியோப்பிய ராணுவ விமானம் ஒன்று, ஆயுதங்களுடன் சோமாலியாவுக்கு சென்றது. மொகடிஷு சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. இறங்குவதற்கு முன்னர் கோளாறு ஏற்பட்டதால், ஓடுதளத்தை சரியாக கணிக்க முடியாமல், அருகில் உள்ள தரையில் மோதி தீப்பிடித்தது. 

வெடிபொருட்கள் வெடித்துச் சிதறி கரும்புகை வெளியேறியதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டு, விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டது. இந்த விபத்தில் விமான ஊழியர் ஒருவர் இறந்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.