Header Ads



துருக்கி விமான ஊழியர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்

துருக்கி விமான நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், இன்று அதிகாலை லெபனான் சென்ற விமானத்தில் தங்களின் பணி முடித்து அங்குள்ள ரபிக் ஹராரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வழியில் இரண்டு வண்டிகளில் வந்துகொண்டிருந்த சில மர்ம மனிதர்கள் அந்தப் பேருந்தை நிறுத்தியுள்ளனர். ஆயுதமேந்திய 8 பேர் அந்தப் பேருந்தினுள் ஏறி அதிலிருந்த விமானிகளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தல்காரர்கள் சென்றதும், மீதியிருந்தவர்கள் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து பின்னர் அவர்கள் துருக்கிக்கு புறப்பட்டதாகவும் லெபனானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த விசாரணையைத் துவக்கியுள்ளதாகவும் அமைச்சகம் அறிவித்துள்ளது. பேருந்தின் டிரைவர் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஒரு சாட்சியாக பாதுகாப்பு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.