Header Ads



அப்துல் கலாமின் நிறைவேறாத கனவு


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர். "என் பயணம்: செயல்களாக மாறிக் கொண்டிருக்கும் கனவுகள்' என்ற, பெயரில் புதிய புத்தகம் எழுதியுள்ளார். அதில், அவரின் நிறைவேறாத கனவாக, போர் விமானத்தின் விமானி கனவு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், ஏரோ-நாட்டிகல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற கலாம், விமானியாக வேண்டும் என்ற விருப்பத்தை, தன் இளம் வயதில் அதிகமாக கொண்டிருந்தார். குறிப்பாக, போர் விமானங்களின் விமானியாக வேண்டும் என்ற ஆசை அவருக்கு அப்போது இருந்தது.இதற்காக அவர் விண்ணப்பித்த போது, இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்புத் துறையின், தொழில்நுட்ப மேம்பாடு, உற்பத்தி இயக்குனரகத்திலிருந்து வாய்ப்புகள் கிடைத்துள்ளன; எனினும், அவை நிறைவேறவில்லை.தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தி இயக்குனரகத்தில், எட்டு விமானி பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், அதற்காக நடத்தப்பட்ட தேர்வில், 25 பேர் தேர்வு எழுதியதில், ஒன்பதாவது இடத்தை பிடித்த கலாமின், போர் விமானி கனவு நிறைவேறவில்லை.

இதனால் வருத்தம் அடைந்த கலாம், ரிஷிகேஷ் செல்ல முடிவு செய்துள்ளார்; அதற்கு முன்னதாக, வேறு, புதிய வழிகளில் முயற்சித்துப் பார்ப்பது என நினைத்து, அப்போதைய முடிவுகளை தள்ளிப் போட்டுள்ளார்."தோல்வி அடையும் போது தான், நம்மிடம் உள்ள வளங்கள் எப்போதும் உள்ளன என்பதை உணர்வோம்; அந்த வளங்களை கண்டுபிடிப்பதும், அவற்றை நம் வாழ்வுடன் இணைத்து செல்வதும் தான் அவசியம்' என, அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.