இஹ்வானுல் முஸ்லிமினுக்கு சர்வதிகாரி சிசி எச்சரிக்கை
எகிப்தில் ஆட்சி செய்த முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தை சேர்ந்த முகமது மோர்சியை ஜெனரல் சிசி கடந்த ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்தார். சிறை வைக்கப்பட்டுள்ள மோர்சியை மீண்டும் பதவியில் அமர்த்தக்கோரி போராட்டத்தில் குதித்துள்ள முஸ்லிம் பிரதர்குட் கட்சிக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது.
இந்நிலையில் மக்களை அச்சுறுத்துவதை முஸ்லிம் பிரதர்குட் கட்சி நிறுத்திகொள்ள வேண்டும் என்று ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சி பேட்டியில் பாதுகாப்பு மந்திரி ஜெனரல் அப்டெல்-படா-எல்- சிசி கூறியிருப்பதாவது:-
நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் அழிவை பார்த்துக்கொண்டு இனி நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். சொத்துக்களை கொளுத்தி மக்களை அச்சுறுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளும் உள்நோக்கம் ராணுவத்திற்கு இல்லை. ஆனால், எகிப்தை ஆளுவதை காட்டிலும் மக்களின் உரிமையை பாதுகாப்பதையே குறிக்கோளாய் பெறுகிறோம்.
பிரச்சினையை அமைதியாக முடித்துக்கொள்வதற்கு நிறைய வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். நாட்டை அழித்து மோதலில் ஈடுபடுவதை கைவிட்டு முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.
மோர்சி ஆதரவாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதை விட்டு இஸ்லாமியவாதிகள் அரசியலில் ஈடுபடவேண்டும். இவ்வாறு ஜெனரல் சிசி கூறியுள்ளார்.

يسقط... يسقط... حكم العسكر. ارحل ياسي سي... مرسي رئيس
ReplyDeleteاخرجوا يا حكام الظالمين ويا كلاب العسكريين
لعن الله عليك يا سي سي وكلب فاسق
حسبنا الله ونعم الوكيل
narahathu naayhal kuraikkinrana. oonaaiyhal uulaivuduhinrana rathakaatterihal sattam iyatruhinrana. eni rathaveetaithan.kaluhuhalukku ini santhosamthaan.
ReplyDelete