Header Ads



இஹ்வானிய சொந்தங்கள் தீவிரவாதிகளாம் - சவூதி அரேபிய இளவரசரின் கண்டுபிடிப்பு

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் பதவி கவிழ்க்கப்பட்ட எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டதற்காக சவூதியில் இஸ்லாமிய தொலைக்காட்சி சேவையின் இயக்குனர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

ரியாதை மையமாகக் கொண்டு இயங்கும் அல் ரிசாலாஹ் தொலைக்காட்சியின் இயக்குனர் தரிக் அல் சுவைதான் தனது டுவிட்டர் பக்கத்தில் முர்சிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சகோதரத்துவ தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறி சவூதியில் செல்வந்த இளவரசர் அல் வலீத் பின் தலால், அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளார். tn


No comments

Powered by Blogger.