Header Ads



அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் "ஊடகத்தாரின் உல்லாச குடும்ப சவாரி"

(யு.எல்.எம். றியாஸ் )

அம்பாறை  மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின்  "ஊடகத்தாரின் உல்லாச குடும்ப சவாரி" இன ஐக்கிய  நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் வைபவம் எதிர்வரும் 17.08.2013  சனிக்கிழமை  காலை  8.00 மணிக்கு சம்மாந்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலையத்தில் சம்மேளனத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பற உள்ளது
.
இன்சா அல்லாஹ்  இச் சவாரியில்  அமைப்பின் ஊடக நண்பர்கள்  தமது குடும்ப சகிதம் கலந்து கொள்ள சகல ஏற்பாடுகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளது .

அக்கரைப்பற்று,அட்டளைச்சனை,பாலமுனை,இறக்காமம் ஆகிய பிரதேச அங்கத்தவர்கள் ஐ,எல்,எம், றிசான்  செயலாளர்  077 298 12 28 எனும் தொலைபேசி இலக்கத்திற்கும் நிந்தவூர்,காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை,மருதமுனை,நற்பிட்டிமுனை , சம்மாந்துறை , ஆகிய பிரதேச அங்கத்தவர்கள் கௌரவ உறுப்பினர் யு.எல்.எம். றியாஸ் 077 298 12 15எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தமது வரவை  எதிவரும் 15.08.2013 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் உறுதிப்படுத்தவும் .என  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர்  ஐ,எல்,எம், றிசான்  அமைப்பின் அங்கத்தவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.