அக்குறணைப் பிரதேச சபையின் முஸ்லிம் அங்கத்தவர்களின் முன்மாதிரி (படங்கள்)
(ஜே.எம்.ஹபீஸ்)
இனங்களுக்கிடையே சமாதானத்தையும், புரிந்துணர்வு மற்றும் நல்லுணர்வை ஏற்படுத்தும் முகமாக அக்குறணைப்பிரதேச சபையின் முஸ்லிம் அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து அக்குறணைப் பிரதேசத்தில் கடமைபுரியும் முஸ்லிம் அல்லாத சகல பணியாளர்களையும் அழைத்து நல்லிணக்க ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர்.
(13.8.2013) அளவத்துக்கொடை ஜானக வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்த இவ்வைபவத்தில் அக்குறணை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை அங்கத்தவர்கள், அளவத்துகொடை பொலீஸ் நிலைய அதிகாரிகள், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள, கிராம அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் என அக்குறணைப் பிரதேச சபைப்பிரிவில் கடமை புரியும் பலதரப்பட்டவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அக்குறணை பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.எம்.சிம்ஸான், அங்கத்தவர்களான அஜ்மீர் பாரூக், இஸ்திகார், மன்சூர்,ஹூசைன் உற்பட இன்ம் பலஅ ங்கத்தவர்கள் இதனை ஒழுங்கு செய்திருந்தனர்.


Post a Comment