சட்டம், கட்டளை வரைவு எனும் பெயரில் புதிய அமைச்சு
(எம்.எம்.ஏ.ஸமட்)
தற்போதுள்ள அமைச்சுக்களுக்கு மேலதிகமாக சட்டம் மற்றும் கட்டளை வரைவு எனும் பெயரில் புதிய அமைச்சு ஒன்று நிருவப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கீழ் வரும் இவ்வமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் நன்தா மலவராய்ச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னர் இராணுவத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்தவர் என்பதுடன், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்தோனேசியாவுக்கான தூதுவராகவும் பணியாற்றியவராவார்.
இதையடுத்து, இதுவரை கோத்தாபய ராஜபக்சவின் வசம் இருந்து வந்த காவல்துறை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்தப் புதிய அமைச்சை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். காவல்துறையை, பாதுகாப்பு அமைச்சில் இருந்து தனியாகப் பிரிக்குமாறு, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
எனினும், பாதுகாப்பு அமைச்சில் இருந்து காவல்துறையை தனியாக பிரிக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே செயற்படும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தி வந்தது.
இந்தநிலையில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, புதிதாக சட்டம் ஒழுங்கு அமைச்சை மகிந்த ராஜபக்ச உருவாக்கியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர அக்கறை காட்டி வருகிறது என்று காண்பிக்கவே இந்தப் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார், நீங்க புதிய அமைச்சு ஒன்றுதானே நிறுவினீங்க, அப்ப ஏன் சார் இரண்டு பொருட்களின் விலையைக் கூட்டினீங்க? ஒரு கிலோ உருளைக் கிளங்கின்ர தீர்வு வரியை ரூபா 15/- லேயும், வெங்காயத்தின் விலையை ரூபா 5/- லேயும் அல்லோ கூட்டி இருக்கீங்க. அமைச்சுக்களைக் குறைத்தால் விலை குறையும்தானே சார். அப்ப ஏன் சார் அமைச்சுகளைக் குறைக்கக் கூடாது? குறையுங்கோ சார், மிச்சம் கூடிப்போச்சு சார்.
ReplyDeleteபுதிய அமைச்சு உருவாக்கம் தம்பியினது அதிகார வல்லமைக்கு கடிவாலம்.....???
ReplyDeleteநவனீதம்பிள்ளை உங்கள நம்பிடுவா?
ReplyDelete