Header Ads



அக்கரைப்பற்று அல்முனீறா பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகள்

(கே.சி.எம்.அஸ்ஹர்)

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட அக்/அல்முனீறா பெண்கள் உயர்பாடசாலை மாணவிகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு குரங்குகள் பெரும் இடையூறு விளைவிப்பதாக அறிய முடிகின்றது.

குரங்குக்குழுவுக்கு தலைவனாகச்செயற்படும் குரங்கின் நடவடிக்கை மாணவிகளையும்,ஆசிரியர்களையும் அச்சமடையச்செய்துள்ளது.அது வகுப்பறைக்குள் புகுந்து திடீர் தாக்குதலில் ஈடுபடவும் முயற்சிசெய்துள்ளது.இவ்விடயம் அக்கரைப்பற்றுப் பொலிசாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சுற்றித்திரியும் குரங்குக்குழு அடிக்கடி பாடசாலைச் சூழலுக்குள் நுழைந்து இடையூறு செய்வதினால் இக்குழுவை காட்டுப்பிரதேசங்களை நோக்கி விரட்டியடிக்க அம்பாறை மாவட்ட வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாடசாலை சமூகத்தினரும்,பெற்றோரும் கோரிக்கைவிடுகின்றனர்.

1 comment:

  1. sabash ! sariyana potti !

    kuranku koottam

    Vs.

    paadasalai kul wanmurai puriyum Arasiyalwathi

    ReplyDelete

Powered by Blogger.