முஸ்லிம் அமைச்சர்களை கைது செய்யும் நிலை உருவாகலாம் - ஆசாத் சாலி
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல் தொடர்பில் பேசமுணைந்தால் அவர்கள் கைது செய்யப்படும் நிலை உருவாகலாம் என தெரிவித்துள்ள தேசிய ஜக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி,ஜக்கிய தேசிய கட்சியின் யாணைச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற ரவூப் ஹக்கீமினால் கூட இது குறித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டார்.
வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு புத்தளம் போல்ஸ் வீதி மைதானத்தில இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரைாயற்றும் போது,தேசிய ஜக்கிய முன்னணி தலைவர் ஆசாத் சாலி மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அவர் அங்கு பேசுகையில்,
இலங்கையின் அரசியல் வரலாற்றில் தற்போதைய அரசானது தமது சாதனையினை பதித்துள்ளது.எந்த அரசும் செய்யாத கொடுங்கோல் ஆட்சி இன்றும் இடம் பெறுகின்றது.குறிப்பாக சிறுபான்மை மக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு தாக்குதல்களை இடம் பெறுகின்றன.
அண்மையில் வெளிவேறியவில் தண்ணீர் கேட்ட மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த போது அவர்களுக்கு குண்டுகளினால் பதில் கூறப்பட்டுள்ளது.முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட போதும்,இதனது வீடியோ காட்சிகள் சீசீடி மூலம் பதிவு செய்யப்பட்டு பொலீஸாருக்கு வழங்கப்பட்ட போதும்,அதற்கான நடவடிக்கைகள் மந்த கதியில் இடம் பெறுவதை காணமுடிகின்றது.இராவன பலய ,ராவய,பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது.
இந்த நாட்டில் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆணையினை வழங்கக் கூடியவர்கள் ராஜபக்ஷ குடும்பத்தினர் மட்டுமே. ஆனால் ஞானசார தேரர் இப்போது கட்டளை பிறப்பித்துள்ளார்.அப்படியெனில் இதனது மர்மம் என்னவென்று புரிந்து கொள்ளமுடிகின்றது.
அதே போன்று கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவூதி அரசு வழங்கிய வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்கக் கூடாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம். இதெல்லாம் இனவாதிகளின் செயற்பாடு என்பதை மறந்துவிட முடியாது.
அண்மையில் கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலீஸ் மா அதிபருக்கு ஆதரங்களுடன் ஒப்படைக்கப்பட்ட சாட்சிகள் குறித்து இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அப்பிரதேசத்தை சாராத சிலர் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.பொலீஸாரின் பாதுகாப்பிலேயெ அதனை செய்துள்ளனர் எளன்பதற்கான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.இவவாறான செயல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.அவற்றை தொடர விடாது செய்வதற்கு மாகாண ஆட்சி மாற்றமொன்றைினை வடமேல் மாகாணத்தில் செய்ய வேண்டும் என்றும் ஆசாத் சாலி கூறினார்.
கலாநிதி விக்ரமபாகு கருணரத்ன, புதிய சிஹல உருமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா,முதன்மை வேட்பாளர் கமர்தீன் அப்துல் பைரூஸ், உட்பட பலரும் உரைாயற்றினர்.
.jpg)
good speech worst government
ReplyDelete