உலகிலேயே அதிக நூல்களைக் கொண்ட கப்பல் இலங்கை வருகிறது (படங்கள் இணைப்பு)
உலகிலேயே அதிக நூல்களைக் கொண்ட கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளது. லோகோஸ் ஹோப் என்று அழைக்கப்படும் இந்த கப்பல் சர்வதேச மாலுமிகளினால் கொழும்பிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி இந்த கப்பலுக்கு பொது மக்கள் விஜயம் செய்து பல பெறுமதியான நூல்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான நூல்கள் விற்பனைக்கு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அந்த கப்பலில் பணியாற்றும் சர்வதேச மாலுமிகளை சந்தித்து உரையாட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.jpg)
Post a Comment