முதன்முறையாக மட்டக்களப்பு பல்கலைகழக கல்லூரி டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்
(ஜூரைஸ்)
இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு பல்கலைகழக கல்லூரியில் தொழில்நுட்ப துறைசார் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலை கழக கல்லூரியின் ஆளுனர் சபை உறுப்பினரும் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான சிப்லி பாறூக் தெரிவித்தார்.
கனியஅளவீடுஅலகுஇதகவல்தொழில்நுட்பம்இதொழில்நுட்பம்இநிர்மானதொழில்நுட்பம் ஆகிய நான்கு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.க.பொ.த.உயர்தரத்தில் சித்தியடைந்த 18 வயதுமுதல் 29 வயதிற்கிடையானவர்கள் இக்கற்கை நெற்pகளுக்கு விண்ணப்பிக்கமுடியும்.ஆங்கில மொழி மூலமான இக்கற்கை நெறிகள் 3 வருடங்களைக்கொண்டதாகும்.
கற்கை நெறிகள் யாவும் இலங்கை பல்கலை கழக கல்லூரியின் காத்தான்குடி வளாகத்தில் இடம்பெறும்.பல்கலைகழக பேராசிரியர்கள் துறைசார் விரிவுரையாளர்களினால் விரிவுரைகள் நடாத்தப்படும்.இக்கற்கை நெறிகளை பூர்த்தி செயபவர்களுக்கு இலங்கை தொழில்சார் தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் பட்டப்படிப்பறிகு உட்புகும் தகைமைகிடைக்கும்.
இளைஞர் விவகார அமமைச்சினதும் இலங்கை ஹிறா பவுண்டேஸனின் கூட்டிணைப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பல்கலை கழக கல்லூரியில் ஆரம்கபிக்கப்படவுள்ள இக்கற்கை நெறிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி 02.09.2013 ஆகும்.விண்ணப்ப படிவங்களை பணிப்பாளர் மட்டக்களப்பு பல்கலை கழக கல்லூரி ஹிஸ்புல்லாஹ் மைதானவீதி காத்தான்குடி எனும் முகவரியில் பெற்றுக்கொள்ளலாமென மேலும் அவர் தெரிவித்தார்.
.jpg)
Post a Comment