Header Ads



மாவடிப் பள்ளிப் பாலத்தை அபிவிருத்தி செய்வது யார்..??

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை அம்பாரை வீதியில் மாவடிப்பள்ளிப்பாலம் மிக நீண்ட காலமாக புணரமைப்புச்செய்யப்படாமையால் மழை காலங்களில் இவ்வீதியால் போக்குவரத்துச்செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிய மழைபெய்தாலேயே மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட இப்பாலம் மழை காலங்களில் நீரில் மூழ்கிவிடுகின்றது.அம்பாரை மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மழைபெய்தால் இவ்வீதியில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டவிடும்.இதனால் மழை காலங்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களி;ல் கொழும்பு கண்டி மற்றும் இதர தூர இடங்களுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுவிடும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் ஏக காலத்தில் மழைபெய்யும் போது பொளன்னறுவை ஊடாக  போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டடால். அம்பாரை மாவட்டத்தில் இவ்வீதியுடாகப்பயணிக்க முடியும் என நம்பி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இவ்விடத்திற்கு வந்து இதற்கு அப்பால் செல்ல முடியாமல் வாகனங்கள் மீண்டும் திரும்பிச்செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. இப்பாலத்தை புணரமைப்புச்செய்வது தொடர்பாக அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்டும் இதுவரை எந்தவிதமான ஆக்கபுர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்பொழுது பொரளாதார அரிவிருத்தி அமைச்சு 1000 சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.இத்திட்டத்தில் மாவடிப்பள்ளிப்பாலத்தினையும் உள்வாங்கி இதனைப்புணரமைப்புச்செய்ய நடவடிக்கை எடுக்க இம்மாவட்ட அமைச்சர்கள் அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும் என வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.