Header Ads



சமூக ஊடகங்களில் ஒழுக்கக் கோவை - முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் செயலமர்வு

சமூக ஊடகங்களில் ஒழுக்கக் கோவையின் முக்கியத்தும் எனும் தலைப்பில் மத்திய மாகாண ஊடகவியலாளர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செயலமர்வு எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் மாத்தளையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செயலமர்வில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சமூக ஊடகங்களில் ஈடுபடும் தமிழ், முஸ்லிம் ஊடவியலாளர்கள் கலந்துகொள்ள முடியும்.

அத்துடன் சமூக ஊடகங்களில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளும் இந்த செயலமர்வில் கலந்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது தலைசிறந்த விரிவுரையாளர்களினால் விரிவுரைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில்; கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களின் சுய விபரக்கோவையினை எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பவும்

பயிற்சி இணைப்பாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், யு-3 - 1ஃ1இ மெனிங் டவுன், எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 8 Programme Coordinator, Sri Lanka Muslim Media Forum, A3-1/1, Manning Town Flats, Elvitigala Mawatha, Colombo 8)  என்ற முகவரிக்கோ அல்லது  muslimmediaforum@gmail.com   என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ சுய விபரக்கோவையினை அனுப்ப முடியும்.

No comments

Powered by Blogger.