பரீட்சைத் திணைக்களத்தின் தீர்மானம் மாணவர்களுடைய அறிவைத் தேடும் உரிமையை மறுத்துள்ளது
(எம்.எம்.ஏ.ஸமட்)
பரீட்சைத் திணைக்களத்தின் தீர்மானம் மாணவர்களுடைய அறிவைத் தேடும் உரிமையை மறுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டான்லி தெரிவித்தார்.
எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப் பரீசில் பரீட்சையைக் கருத்திற்கொண்டு இப்பரீட்சை தொடர்பான வகுப்புக்களை நடாத்துவதற்கு கடந்த திங்கள் நல்லிரவு முதல் பரீட்சைத் திணைக்களம் தடை செய்துள்ளது தொடர்பில் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கல்வி அமைச்சின் தீர்மானங்கள் கல்விச் சமூகத்தை சிக்கல்களுக்குள் தள்ளுகிறது. அறிவைத் தேடிக் கற்பது மாணவர்களின் உரிமை. அவ்வுரிமை அந்த கையிலும் எவராலும் மீறப்படக்கூடாது. அதனை அனுமதிக்கவும் முடியாது.
அந்தவகையில், பரீட்சைத் திணக்களத்தின் அறிவிப்பானது 5ஆம் தர புலமைப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அறிவுத் தேடலை தடை செய்துள்ளது. புலமை பரீட்சை தொடர்பான வகுப்புக்களை நடாத்துதல், அது தொடர்பான கருத்தரங்குகளை நடாத்துதல், கையேடுகளை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது கடந்த திங்கள் நல்லிரவு முதல் பரீட்சை நடைபெறும் தினமான 25ஆம் திகதி வரை தடைசெய்யபட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பரீட்சைககள் நடைபெறும் முன்னர் வினாத்தாள்கள் வெளிவருவதைத் தடுக்கும் நோக்குடனே இவ்வறிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. அப்படியாயின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளிவராமல் அதைப் பாதுகாக்க வேண்டியது கல்வி அமைச்சினதும் பரீட்சைகள் திணைக்களத்தினதும் பொறுப்பும் கடமையாகும். ஆந்தகைய நடவடிக்கையை கடமையை சரிவரப் புரியாது மாணவர்களின் அறிவுத் தேடலைத் தடை செய்திருப்பது அவர்களின் கற்றல் உரிமையை மீறியுள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரவுள்ளதாகவும் இவ்வறிப்பு மீளப் பெறப்பட வேண்டுமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment