Header Ads



யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு இராணுவம் உதவி (படங்கள்)


(பாறூக் சிகான்)

யாழ் மாவட்ட பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு தற்காலிகமாக வீடுகளை அமைப்பதற்கான  கட்டுமானப் பொருட்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு சீமெந்து தகரம்  மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள்  இதன் போது  வழங்கப்பட்டது.

512ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் புதிய பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 51ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் அபேநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த கட்டுமானப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் 512ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் அஜித் பல்லேகல  படை அதிகாரிகள்  பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது ஜே-86,ஜே-87,ஜே-88 கிராம சேவகர் பிரிவில் வதியும் மக்கள் இப்பொருட்களை பெற்றுக் கொண்டனர்.


No comments

Powered by Blogger.