Header Ads



அரசாஙகத்தை பலப்படுத்த வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு உள்ளது - அமைச்சர் நாவின்ன

(இ. அம்மார்)

ஜனாதிபதி இந் நாட்டில் சகல மக்களும்  ஒரு தாய்  மக்களாக சுதந்திரமாகவும் ஒற்றுமையுடனும் வாழ்வதற்கான வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். அவ்வகையில் இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் தங்களுடைய அன்றாட நடவடிக்கையை மேற்கொள்ளவும்  எவ்விதமான அச்சமுமின்றி நிம்மதியுடன் வாழவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் வெளியிறங்கி பிரயாணம் செய்ய முடியாத பயம் எல்லோருக்கும் இருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலை இருந்தது. இவ்வாறு ஒரு அமைதியான  சூழ்நிலையை உருவாக்கித் தந்தை அரசாஙகத்தை தொடர்ந்து அரசியல் ரீதியாகப் பலப்படுத்த வேண்டிய தேவை குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கும் பங்களிப்பு இருக்கிறது என்று  அமைச்சர் எஸ் பீ. நாவின்ன தெரிவித்தார்.

பொதுசன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்  குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சத்தாரின் முதன் தோதல் பிரச்சார நடவடிக்கையும் கட்சிக் கிளை திறப்பும் குருநாகல் தெலியாகொன்னவில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட சிரேஷ; அமைச்சர் எஸ் பி. நாவின் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

மாகாண சபையில் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் தங்களுடைய அரசியல் பிரதிநிதிகளை உருவாகக்காமல் இருப்பது அவர்களுக்கு தானாக கிடைக்கும் சந்தர்ப்பங்கழள இல்லாமற் செய்து கொள்கின்றார்கள். கடந்த காலத்தில் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் தறவிட்டார்களா அல்லது முயற்சிக்க வில்லையா என்ற சந்தேகம் அப்போழுது எனக்கு இருந்தது.

மாகாண சபை என்பது  ஒரு சமூகத்தினுடைய கல்வி, சமூக, பொருளாதர அபிவிருத்திற்கு  ஒரு களம். ஆனால் குருநாகல் மாவட்ட முஸ்லிம் மக்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. அது பற்றிய அறிவின்மையும் குறிப்பாக சாதிக்க முடியாத கட்சிகளுடன் இணைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஐந்து வேட்பாளர் போட்டியிடுகின்றார்கள், ஸ்ரீ. மு. காங்கிரஸில் 37 வேட்பார்ளர்கள் போட்டியிடுகின்றார்கள். அந்தக் கட்சிகளுக்கு  வாக்களிப்பது என்பது எந்தவகையிலும் பிரயோசனம் இல்லை. முஸ்லிம்களுடைய கல்வி ரிதியிலான அபிவிருத்திகள் சமூக சம்மந்தமான விடயங்கள் பேசுவற்கு நல்ல செயற்திட்டங்களi மேற் கொள்வதற்கு குறைந்த பட்சம் தங்கiளுடை அதிகாரங்களைக் கூ;ட தம் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் . எனவே.  பொதுசன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரே ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்படுகின் வாக்குகள் அரசாங்கத்தை தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு முஸ்லிம்களும் ஆதரவாக உள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்ட உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.



1 comment:

  1. தமிழர்களுக்கு எதிரான யுத்தக் கதை இப்ப நாறின கதையாய் போச்சு. நீங்கள் தற்போது நடத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான அந்த யுத்தக் கதைய கொஞ்சம் சொல்லுங்க சார். கேட்க ரொம்ப நல்லா இருக்கும் எண்டு நினைக்கன்.

    ReplyDelete

Powered by Blogger.