Header Ads



சிறையிலிருந்து ஐவேளைத் தொழும் முஸ்லிம் நண்பரது வாழ்வில் குற்றங்களை அவதானிக்கவில்லை - விக்ரமஆராச்சி

(இக்பால் அலி)

அனைத்து மதங்களும் நன்மைகளைத்தான் போதிக்கின்றன. நாங்கள் யாவரும் மதங்களின் போதனைகளைப் பின்பற்றாததன் காரணமாகவே கணிசமான அளவு குற்றங்கள் புரிவோக இருக்கின்றோம் எம்முடன் சிறையில இருந்து கொண்டு ஐவேளைத்  தொழுகையில் ஈடுபடுகின்ற எமது முஸ்லிம் நண்பரது வாழ்வில் குற்றங்களை நான் அவதானிக்கவில்லை என்று   சிறைச்சாலையின் சமூக சேவைப் பிரிவு அதிகாரி  விக்ரமஆராச்சி  தெரிவித்தார்.

தைபா நிறுவணத்தின் அணுசரையுடன் நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு குண்டசாலை,  பள்ளேகல திறந்த சிறைச்சாலையில்  காலை உணவு விநியோகமும் மார்க்க சொற்பொழிவும் நடை பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறைச்சாலையின் சமூக சேவைப் பிரிவு அதிகாரி திரு. விக்ரமஆராச்சி அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.

நிகழ்வின் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அஷ;nஷய்க் எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி உரைநிகழ்த்துகையில்,

 'நாட்டில் சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லிம்கள் சிறையில் பெரும்பான்மையினரில் உள்ள குற்றவாளிகள் எண்ணிக்கை அளவு காணப்படுவதானது இஸ்லாமிய நெறிமுறையில் இருந்து நாம் தூரமாகியதைத் துல்லியமாகக் காட்டுகின்றது. எனவே குற்றத்தின் தன்மையை உணர்ந்து நம்மை நோக்கி மன்னிப்பிற்க இரவும் பகலும் அழைப்பு விடுக்கின்ற அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்விடம் மனத்தூய்மையோடு மன்றாடுவது அவசியம் என்றும் அதற்க ஆலிம்கள் தரகர்களாக இருந்துதான் சொல்லித்தரவேண்டும் என்பது அவசியமில்லை என்றும் தனிமையில் அல்லாஹ்விடம் குற்றத்தைச் சொல்லி தூய பணயத்தை மேற்கொள்வது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார். நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக நிவாஸ் ஹாஜியார் நன்றியுரை நிகழ்த்தினார்.


No comments

Powered by Blogger.