Header Ads



புர்ஹான் (பஃஜி) அவர்களின் தாயார் வபாத்தானார்

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உப தலைவரும், கண்டி மாவட்ட உலமா சபை தலைவருமான அல்ஹாஜ் புர்ஹான் (பஃஜி) அவர்களின் தாயார் ஹாஜியாணி மாஜிதா உம்மா அவர்கள் இன்று மடவளை பஸார் இல் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அல்ஹாஜ் புர்ஹான் (பஃஜி) ,ஜனாப் அப்துல் ஹமீத், ஜனாப் ஹைதர் அவர்களின் தாயாரும் ஜனாப் ஷபீக் அவர்களின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா தற்போது மடவளை பஸார் இல் உள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (10.08.13) இரவு 8.30 மணியளவில் மடவளை பஸார் ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தகவல்: அல்ஹாஜ் ரிஸ்மி 

No comments

Powered by Blogger.