Header Ads



பெருநாள் ஆடையை அணிந்து அழகு பார்க்க முயன்ற சிறுமி, அலூமாரி கவிழ்ந்து வபாத்

(Tm) கிண்ணியா பிரதேசத்திலுள்ள வீட்டொன்றில் வைக்கப்பட்டிருந்த மர அலுமாரி விழுந்ததில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலிருந்த சிறுமி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் வைத்தே இந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி கிண்ணியா றகுமானிய்யா நகரை சேர்ந்த  ஒன்பது வயதான அப்துல் ஜப்பார் சியானா என்பரே உயிரிழந்துள்ளார்.

தனக்கு வாங்கிய பெருநாள் ஆடையை அணிந்து அழகு பார்ப்பதற்காக அலூமாரியின் மேல் தட்டில் வைக்கப்பட்டிந்த புதிய ஆடையை அலுமாரியிலேறி எடுக்க முயன்றுள்ளார். இதன்போது அலுமாரி முன்புறமாக கவிழ்ந்துள்ளது.

சத்தத்தை கேட்டு வீட்டார்கள் வந்து பார்க்கின்ற போது அலுமாரிக்கு கீழே சிறுமி வீழ்ந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். உடனடியாக அச்சிறுமியை கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன அவசர சிகிச்சைக்காக அவர்  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எவ்வாறாயினும் சிகிச்சை பலனளிக்காத  நிலையில் கண்டி வைத்தியசாலையில் இந்த சிறுமி இன்று உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.