நோன்பு பெருநாள் நாட்களில் கட்டுப்பாடற்ற விலைகளில் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்
(அப்துல்சலாம் யாசீம்)
அனுராதபுரம்- மாவட்டத்தில் ஹொரவ்பொத்தானை நகரப்பகுதியில் உள்ள கடைகளில் அத்தியவசிய பொருட்களின் விலைகள் கடைகளுக்கு கடை வித்தியாசத்தில் விற்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நோன்பு பெருநாள் நாட்களிலும்,விசேட தினங்களிலும் கட்டுப்பாடற்ற விலைகளில் பொருட்கள் விற்கப்படுவதாகவும்,ஒரு கடையில் ஒரு கிலோ சீனியின் விலை 95 ரூபாயிற்கு விற்கப்படுவதாகவும்,மற்றுமொறு கடையில் 98 ரூபாயிக்கு விற்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
சீனி,பருப்பு, கோதுமை மா,அரிசி போன்ற பொருட்கள் நாளுக்கு நாள் ஒரு கடையில் குறைந்தும் மற்றைய கடையில் கூட்டியும் விற்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. கடை உரிமையாளர்கள் கலந்துறையாடி விலைகளை கூட்டியும்,குறைத்தும் விற்பது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரியவருகின்றது.
எனவே விலை கட்டுப்பாட்டு பரிசீலனைகளை மேற்கொண்டு அப்பாவி ஏழைமக்களின் பணத்தை சூரையாடும் கடை முதலாளிமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
.jpg)
Post a Comment