Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் - ஒருவருக்கு காயம்

(J.M.Hafeez and Mohamed Asik)

கண்டி, கல்ஹின்னையில் அமைச்சர் ரவூப் ஹகீமினால் திறந்து வைக்கப்பட்ட  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி அலுவலகம் மீது நேற்று (20.8.2013 மாலை) தாக்குதல் ஒன்று நடந்ததாக கண்டி மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் தெரிவித்தார்.

(நேற்று 20) மாலை அலுவலகத்திற்குள் புகுந்த சுமார் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று அலுவலகத்தை தாக்கிதாகவும் அப்போது அங்கு வீட்டிருந்த தனது சகோதரரான மொஹமட் சியான் என்பவர் கடுமையாக காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர் அங்கும்புறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் மேலும் தெரிவித்தார். இத் தாக்குதலின் போது அலுவலகத்திலிருந்த  உடைமைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்  காரியாலயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைசச்ருமான ரவுப் ஹகீம் கடந்த ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.


5 comments:

  1. கிழக்கின் கல்முனையில் அவியும் மு.கா.வின் பருப்பு, மத்திய மாகாண கல்கின்னையில் அவியமாட்டாது என்பதை உணர்த்தும் சைக்கினையே மு.கா. அலுவலகம் தாக்குதலாகும்.

    ReplyDelete
  2. ஜனநாயகம் கிலோ எவ்வளவு ???

    ReplyDelete
  3. Halal, Abaya,Mosque Nonbu perunal Pirai Matrum Muslim problemuku Pesatha Muslim Cangres ini office pottu enna seiya Mosqu udaikum pothu parkka povatha muslim cangress ethukku? Palliya Udaithangal athavida periyatha office Allah Periyawan

    ReplyDelete
  4. Mr Marzuk பொதுபலசேனாவின் பருப்பு சாப்பிட்டீங்களோ ஹிரேன்பாசில் அவிச்சது உங்கட பருப்பா

    ReplyDelete
  5. Mr Mirshal பொது பல சேனாவின் பருப்பை தான் நமது பிரதிநிதிகள் தின்று வாய் மூடி மௌனியாக உள்ளனர்.கிரண்ட் பாசில் அவிந்தது எனது பருப்போ அல்லவோ 82 வருட அரச மரம் தறிக்கப்பட்டு பழைய பள்ளியில் தொழுகை நடக்கிறது என்பது எனது அனுமானம்...இவ்விடத்தில் தௌஹீத் வாதிகளின் உறுதியை D .B .S ஜெயராஜ் தனது ஆக்கம் ஒன்றில் மெச்சி இருந்தார்.என்பதும் குறிப்பிட தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.