Header Ads



புத்தளம் பொலிஸ் சோதனைச்சாவடியின் திடீரென முளைத்த சுதந்திரக் கட்சி அலுவலகம்

(Adt) புத்தளம் பஸ் நிலையத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த பொலிஸ் சோதனைச்சாவடி அகற்றப்பட்டு அதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவால் நேற்று (13) இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக கபே இயக்கம் தெரிவித்துள்ளது. 

இந்த அலுவலகம் அமைந்துள்ள இடம் புத்தளம் நகர சபைக்குச் சொந்தமான கட்டிடத்தில் ஆகும். 

அரச சொத்தில் இவ்வாறு கட்சி அலுவலகம் திறப்பது அரச சொத்துக்களை அநாவசியமாக பயன்படுத்தும் குற்றச்செயல் என கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து புகைப்பட ஆதாரத்துடன் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் அரச சொத்துக்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வதை கண்டிப்பதாகவும் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச சொத்துக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

இவ்வாறான தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயற்பாடுகள் குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் தகவல் வழங்கப்படும் என கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.