இனவாதிகள் ஒருபோதும் திருந்தமாட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது..!
(எஸ்.அஷ்ரப்கான்)
மஹியங்கண ரஜமகா விகாரையின் விகாராதிபதி வட்டரக்கே விஜித ஹிமி தேரர் அவர்கள் கண்டியிலிருந்து கொழும்பிற்குச் சென்று கொண்டிருக்கையில் கேகாலையில் வைத்து வழிமறித்து இனவாத குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பதை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். இது தொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மஹியங்கணை பள்ளிவாசல் மூடப்படுகின்ற விடயத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசியமைக்காக அவரது விகாரையும் தாக்கப்பட்டு அவரும் வழிமறித்து தாக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த நாட்டில் இனவாதிகள் ஒருபோதும் திருந்தமாட்டார்களோ ? என்று எண்ணத்தோன்றுகின்றது. பௌத்தத்தை பாதுகாப்பதாகக்கூறி நியாயத்தைப்பேசுகின்ற பௌத்த மதகுருமார்களையே தாக்குகின்ற இனவாதம் பௌத்தத்தின் காவலனாக எவ்வாறு இருக்க முடியும் என வினவுகின்றோம் ? மட்டுமல்லாமல் இதுவரை பொதுபலசேனா பின்னே மறைந்துகொண்டு தமது அடியாட்களை வைத்து அடாவடித்தனங்களைப் புரிந்துவிட்டு, தாம் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தத தீவிரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை என்று போட்டு வந்த வேசம் குறித்த தேரரினால் களையப்பட்டிருக்கின்றது.
பொதுபல சேனா அங்கத்தவர்கள் மஹியங்கணைக்கு விஜயம் செய்ததன் பின்னர்தான் மஹியங்கணை பள்ளிவாசல் தாக்கப்பட்டதோடு, பன்றியின் மாமிசமும் அங்கு வீசப்பட்டது. என்ற உண்மையை தாக்கப்பட்ட தேரர் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கின்றார். அத்தோடு தம்மைத்தாக்கியது பொதுபல சேனா குண்டர்களே என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். அவ்வாறெனில் தமது நிலைப்பாட்டிற்கு இணங்காத பௌத்த மதகுருமார்களையே தாக்குகின்ற பொதுபலசேனாவின் சுயரூபம் பௌத்த மக்களுக்கு மத்தியில் இன்னும் மூடி மறைக்கப்பட முடியும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இருக்கமுடியாது.
எனவே சகோதர பெளத்த மக்கள் இந்த இனவாதிகளை ஓரங்கட்ட ஒன்றுபட்டு முன்வர வேண்டும் என்று வேண்டுகிறோம். இந்த இனவாதிகள் முஸ்லிம்களின் அல்லது சிறுபான்மை மக்களின் விரோதிகளாக வெளிப்படையாக தோற்றமளித்தாலும் இவர்கள் முழு நாட்டினதும் குறிப்பாக சிங்கள பௌத்த மக்களினதும் விரோதிகள் மட்டுமல்லாமல் நாட்டை மீண்டும் ஒரு முறை அதல பாதாளத்திற்குள் தள்ளுவதுதான் இவர்களின் இலக்காகும். என்பதை இந்நாட்டின் வரலாறு தெரிந்த அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நாட்டின் வரலாற்றுப்புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினால் சுதந்திர இலங்கையின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த சாதாரண பிரச்சினைகளுக்குத்தீர்வுகாண தமிழ் தலைமைத்துவங்கள் புறப்பட்டபொழுது இவர்கள் போன்ற இனவாத சக்திகள் அவற்றிற்குத் தீர்வுகாண்பதைத்தடுத்து இனவாத கோசத்தை முதலீடாக்கி அதன் மூலம் 1956 ஆம் ஆண்டு ஒரு இனவாத அரசை உருவாக்கி தனிச்சிங்கள சட்டத்தைக்கொண்டுவந்து தமிழ் மக்களின் சாதாரண பிரச்சினைகளை தேசிய பிரச்சினையாக்கிய பெருமை அன்றைய இனவாத சக்திகளையே சாரும்.
அதனைத்தொடர்ந்து தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் அவ்வினவாத சக்திகள் தகர்த்து எறிந்ததன் காரணமாகத்தான் நாடு 30 வருட கொடூர யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கவேண்டி ஏற்பட்டது.
சிங்கப்பூரை கொழும்பைப்போன்று வடிவமைக்க வேண்டும் என்று, அன்று முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான்யு கனவு கண்டார். அதன்பின் நமது நாடு இனவாத கொடுக்கான்களின் விஷத்தினால் வீரியம் இழந்து நிற்க சிங்கப்பூர் கொழும்பைவிட பன்மடங்கு வளர்ந்து வளர்ச்சியின் உச்சத்திற்கு இலக்கணமாய் திகழ்ந்தது.
இனவாதம் செய்த சதி 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா சிங்கப்பூர்போன்று கொழும்பைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கனவு காணுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டார். அப்பொழுதாவது இனவாதம் பாடம் படித்திருந்தால் யுத்தத்தைத் தவிர்த்து இலங்கையையும் சிங்கப்பூரைப்போன்று அல்லது அதை விடவும் ஒருபடி மேலாக கட்டி எழுப்பியிருக்கலாம். ஏனெனில் எதுவித வளமும் இல்லாத சிங்கப்பூருக்கு இருந்ததெல்லாம் பூகோள வரைபடத்தில் அதற்கிருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருக்கையும், அதன்மூலம் கடல் ஆகாயப்போக்குவரத்தில் தன்னை அது ஒருபிரதான இடத்திற்கு கொண்டுவந்ததுமாகும். அதேபோன்றுதான் இலங்கையும் இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்திருக்கின்ற சூழ்நிலையில், கடல்
ஆகாயப்போக்குவரத்தில் பிரதான இடத்தைப்பிடிப்பது மட்டுமல்லாமல் சர்வதேச வர்த்தகத்திலும் ஒரு கேந்திர ஸ்தானமாக மாறக்கூடிய வாய்ப்பை இலங்கையின் பூகோள அமைவிடம் வழங்குகின்றது.
அவ்வாறான சூழ்நிலையில் இலங்கை ஒரு வளரச்சியடைந்த, வசதிபடைத்த நாடாக என்றோ மாறியிருக்க வேண்டும். ஆனால் பிற்போக்கு இனவாதம் நாட்டை குட்டிச்சுவராக்கி இன்று யுத்தம் நிறைவடைந்த நிலையில் இனியாவது இந்த நாடு முன்னேற்றப்பாதையில் வீறுநடைபோடும் என்று கனவு கண்ட இந்நாட்டு மக்களுக்கு இவ்வினவாத சக்திகளின் அன்மைக்கால தொடர்ச்சியான செயற்பாடுகள் பேரிடியாக விழுந்நிருக்கின்றது.
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து ஆளைக் கடிப்பதுபோல் இதுவரை சிறுபான்மைகளைக் குத்திவந்த இனவாதக் கொடுக்கான் சிறுபான்மைக்கு ஆதரவளித்த ஒரேயொரு காரணத்திற்காக தம் இனத்தைச் சார்ந்த மதகுருவையே விட்டுவைக்கவில்லை என்பது இந்நாட்டின் எதிர்காலம் தொடர்பான ஒரு பாரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கின்றது.
எனவே நாட்டில் நேர்மையாகச் சிந்திக்கின்ற சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களும் தீர்வு கிடைக்குமென இலவு காத்த கிழியாய் இருப்பதை விடுத்து தீர்வுகாணப்புறப்படுகின்ற ஒன்றுபட்ட பயணத்திற்காக உடனடியாக புறப்பட வேண்டும் பொறுத்திருக்க நேரமில்லை புறப்படுங்கள். இனவாதிகளைத் தனிமைப்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும், சமாதானத்தையும், வளர்ச்சியையும் இலக்காகக்கொண்ட ஒற்றுமைப்பயணம் தொடங்கட்டும். என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ATHU SARY HAMEED AVARKALE
ReplyDeleteNEENKAL ENKU NINRU KONDU ETHAI PESUKINREERKAL.
UNKAL THEIVAM JANATHIPATHITHANE ITHAI VALARKINRARKAL.
ORU MURAI ANTHE JANATHIPATHIKKU KONCHEM KATTAMAHA URAIKKUMPADY UNKALAL PESA MUDIUMA?
You and your party with Mahinda. so, you have no rights to talk like this statement and essay. We SL Muslims neglected Muslim Congress already.
ReplyDeleteWe will not cast our votes to you.
If we cast votes to you and Mahinda all are same.
எய்தவன் இருக்க அம்பை நோகிரிங்கள இது என்ன நியாயம் (இது உங்கள் வீர வசனம் )
ReplyDeleteநான் இவரை (ஹமீட் அவர்களை) ahm.azwar அவர்களின் உடன் பிறந்த சகோதரனாகவே பார்க்கின்றேன். இனவாதிகள் திருந்துவதற்கு முன்னர் உங்களைப் போன்ற சூடுசுரணையற்றவர்கள், உண்மை முஸ்லிமாக உருவெடுக்க வேண்டுமல்லவா? நீங்கள்தானே இனவாதிகளுக்கு முட்டுக்கொடுத்து நக்குத்தினி அரசியலை நாடகமேற்றுகின்றீர்கள். அறிக்கைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை? யாருக்கு அறிக்கை விடுகின்றீர்கள்?
ReplyDelete