தமிழ் தேசிய கூட்டமைப்புக்காக தேசிய ஷுரா கவுன்சில் பிரச்சாரம் செய்யுமா..?
(நீமா)
எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராது ஷுரா கவுன்சில் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற முயற்சியிலீடுபட்ட ஷுறா கவுன்சில் ஏற்பாட்டாளர்கள் சிலர் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடுவது பற்றி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஷுரா கவுன்சிலை உருவாக்கும் முயற்சியிலீடுபட்ட முக்கியஸ்தர்களான நாஜா முஹம்மத்இ சிராஜ் மசூர்இ பொறியியலாளர் அப்துர் ரஹுமான் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரான அஷ்ஷேக் அஸ்மின் ஜயூப் என்பவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பட்டியலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக ஷுரா கவுன்சில் முக்கியஸ்தர்கள் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஷ்ஷேக் அஸ்மின் ஜயூப் மன்னார் மாவட்டத்தில் வெற்றியீட்டும் வாய்ப்பு இல்லை. இருந்தபோதும் அவர் தோல்வியடையும் பட்சத்தில் அவருக்கு தேசியப் பட்டியல் வழங்கப்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் பிரமுகர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் மாத்திரமே. அஷ்ஷேக் அஸ்மின் ஜயூப்புக்கு அப்போதுதான் தேசியப் பட்டியல் வாய்ப்பும் உறுதி செய்யப்படும்.
அரசியல் கலப்பற்ற முஸ்லிம் அமைப்பொன்று முஸ்லிம்களது பிரச்சினைக்கு குரல் கொடுப்பதற்கு தேவை என்று பிரச்சாரம் செய்த இவர்கள் திடீரென தடம்புரண்டு அரசியலிலீடுபட்டிருப்பது பற்றி பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

He will win definetly, Insha Allah. I do not know why these parties of Muslims support to ruling party. Now they are Muslims enemies. Destroye our Mosques, Holy places, Muslim Business places, Educations, jobs, Health, Land captures by Governmnet etc..
ReplyDeleteஅரசியல் கலப்பற்று சேவை ஆற்ற விரும்பினும், இலங்கையின் தட்போதைய நிலமை..முஸ்லிம் உரிமை பாதுகாக்க வாக்கு பெற்றவர்கள் அரசின் அநியாங்களுக்கு சாமரம் வீசும்போது....மாற்று வழி தேடி கூட்டமைப்புடன் நிபந்தனையின் பேரில் இணைவது உசிதம்
ReplyDeleteInda Tamil tesiya koottamaippu mattum nallawarhala ( paasisap pulIhalin enjiya elumbuhal taane ) awarhal mattum muslimgalin nanbana !!!!!??????? Wadi kattiya muttaalhal iwarhalai aadarippawan (arasiyalil nulayya enna commedy panna Wendi irukkudu )
ReplyDeleteIt is very difficult to find a pure heart people who will struggle for Islam
ReplyDeleteஇதிலொன்றும் கவலைப்படுவதற்கு இல்லை.
ReplyDeleteதேசிய சூரா எனப்படும் பொதுக்கட்டமைப்பொன்றை, இன்றிருக்கின்ற இதே அரசியல்வாதிகளின் சுயநலமான அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கும் செயற்பாடுகளுடன் உருவாக்குவதை விட, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சுயநலமற்ற அரசியல்வாதிகளை இந்நாட்டில் உருவாக்கிய பின் அத்தகைய தேசிய சூரா சபையொன்றை அமைப்பதே உசிதமானது.
இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அத்தனை அநியாயங்களுக்கும் பதவியிலுள்ள அரசாங்கம் பக்க பலமாக இருக்கின்றது என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த விடயமாகும்.
இந்த அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து பாதுகாத்து வருவது எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகளே என்பதும் நன்கு தெரியும்.
இந்நிலையில் இந்த அரசியல்வாதிகளும், அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக காத்திரமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் நிலையில் தேசிய சூரா அமைந்து என்ன பயன் விளையப் போகின்றது?
எனவே, 'இஸ்லாத்தைப் பாதுகாக்கும்' தனித்துவமான கொள்கையுடன் நாடெங்கும் புதிய முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் முதலில் உருவாக்கப்பட வேண்டும். அதன் பின்னரே தேசிய சூரா அமைய வேண்டும்.
செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியஸ்தர்கள் எந்த விதத்திலும் தடம்புரளவில்லை. அவர்கள் தீட்சண்யமாகவே காய்களை நகர்த்தி வருகின்றனர் என்பது எனது கருத்தாகும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-