Header Ads



காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளன ஏற்பாட்டில் ஒன்றுகூடல்


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு
காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் விசேட 'ஒன்றுகூடல் நிகழ்வு'  ஒன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் உப செயலாளர் மௌலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) தெரிவித்தார்.

எதிர்வரும் 24.08.2013 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை வரை இடம்பெறும்  இந்நிகழ்வு பூநொச்சிமுனை கடற்கரையில் நடாத்த  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எமது ஊரின் மூத்த, இளைய உலமாக்கள் பங்கேற்கும் சிறப்புமிகு நிகழ்வாகவும் இது நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் தங்கள் வருகையினை உறுதிப்படுத்தும் முகமாக சம்மேளனத்தின் பொருளாலரும், மஸ்ஜிதுல் ஹசனாத்-இரும்புத்தைக்கா – மஸ்ஜித் இமாமுமான மௌலவி.ஏ.எல்.எம்.இப்றாஹீம் (பலாஹி) (தொ.பே.இல.0776380618) உடன் தொடர்புகொள்ளுமாறும்  வதாக சம்மேளன உப செயலாளர் மௌலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.