எகிப்து இரர்ணுவத்திற்கு டுபாய், பஹ்ரைன் ஆதரவு - தூனீஷியா, ஜோர்தான், மலேஷியா எதிர்ப்பு
முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த நடவடிக்கைக்கு பிராந்திய நாடுகளான ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் ஆதரவு தெரிவித்துள்ளன. “உச்ச கட்ட பொறுமைக்கு பின் இறையாண்மை நடவடிக்கையாக எகிப்து அரசு மேற்கொண்ட செயலைப் புரிந்துகொள்ள முடியும்” என ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
“அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டி எகிப்து மக்களை பாதுகாக்கவே எகிப்து நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது” என பஹ்ரைன் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மன்னராட்சி நீடிக்கும் சவூதி அரேபியா, குவைட் உட்பட வளைகுடா நாடுகள் ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி மொஹம்மட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் எகிப்தில் இடம்பெற்ற வன்முறையை கண்டித்தும் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவாகவும் பல நாடுகளிலும் கடந்த இரு தினங்களில் ஆர்ப்பாட்டங்கள் பதிவாகின. பலஸ்தீனின் காசா, துருக்கி, தூனீஷியா, ஜோர்தான், மலேஷியா போன்ற நாடுகளில் முர்சிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் பதிவாயின.

Post a Comment