பரக்காஹதெனியாவில் 'அமைதி - பள்ளிவாசல் முன்னால்' விவகாரம்
(டி.பி.எஸ்.ஜெயராஜ்)
பொது பல சேனாவின் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தின் சமீபத்தைய இலக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, கண்டி - குருநாகல் நெடுஞ்சாலை வழியில் மாவத்தகம காவல்துறை அதிகாரத்தின் கீழ் வரும் பரக்காஹதெனியா பிரதேசத்தில் நிறுவியுள்ள எதுவித தீங்குமற்ற ஒரு விளம்பரப் பலகையாகவுள்ளது. பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடாத்த ஞ}னசார தேரர், குருநாகலவில் வைத்து பகிரங்கமாக “அமைதி - பள்ளிவாசல் முன்னால்” என்று எழுதப்பட்டுள்ள மனதை புண்படுத்தும் அந்த விளம்பரப் பலகை அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்,காவல்துறையினரும் உடனடியாக அவரது கட்டளைக்கு கீழ்படிந்து அதை அகற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர், ஆனால் பரக்காஹதெனியாவில் உள்ள முஸ்லிம் மக்களின் எதிர்ப்பு காரணமாக அது முறியடிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்(யு.பி.எப்.ஏ) தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் மாவத்தகம தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(எஸ்.எல்.எப்.பி) அமைப்பாளருமான நிரஞ்சன் விக்கிரமசிங்கா இதில் தலையிட்டு பதற்றமடைந்துள்ள முஸ்லிம் மக்களிடம் அந்த விளம்பரப் பலகைகள் அப்புறப்படுத்தப்பட மாட்டாது என உறுதியளித்ததுடன் அதற்கு காவல்துறையினரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
குருநாகல
ஸ்ரீலங்காவிலுள்ள சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக இன மத பாசிச வாதிகளான பொது பல சேனா அமைப்பினர் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரத்தில் சமீபத்தைய இந்த அரங்கம் ஆகஸ்ட் 11ந் திகதி ஞ}யிறன்று ஆரம்பமானது. அன்றைய தினம் பொது பல சேனா வயம்ப பிரதேசம் என்றழைக்கப்படும் வட மேல் மாகாணத்தின் தலைநகரமாகிய குருநாகலவில் ஒரு பேரணியை நடத்தியது. அன்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளரான கலகொடாத்த ஞ}னசார தேரர் அந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்த சுமார் 500 பேர்கள் மத்தியில் உரையாற்றினார். எதிர்பார்த்தபடி ஞ}னசார தேரர், ஏராளமான முஸ்லிம் எதிர்ப்பு வசைமாரிகளை தனது பேச்சில் பொழிந்து தள்ளியிருந்தார்.
அவரால் எழுப்பப் பட்ட பிரச்சினைகளில் ஒன்று, கண்டி - குருநாகல வீதியான ஏ - 10 நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு விளம்பரப்பலகைகள் பற்றியது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையிரால்; பரக்காஹதெனியா பகுதியில் நெடுஞ்சாலையருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப்பலகைகளில் “அமைதி பள்ளிவாசல் முன்னால் உள்ளது” என்று எழுதப்பட்டுள்ளது. இந்தப் பலகையில் சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பள்ளிவாசல் முன்னாலுள்ளது என்கிற வாசகங்களுக்கு மேல் பெரிய எழுத்துக்களில் தயவு செய்து அமைதி காக்கவும் என்று எழுதப்பட்டுள்ளது. அந்தச் சுற்றாடலில் வெளிப்படையாக இரண்டு மசூதிகள் உள்ளன, மற்றும் விளம்பரப்பலகைகள் வீதியின் இரு மருங்கிலும் நிறுவப்பட்டுள்ளன.
விளம்பரப்பலகைகள்
கூசாமல் பழி கூறுவதற்கும் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு விஷத்தை கக்குவதிலும் பெயர்பெற்ற ஞ}னசார தேரர், ஸ்ரீலங்காவிலுள்ள பெரும்பான்மையினரான சிங்கள பௌத்தர்களை இந்த விளம்பரப்பலகைகள் அவமதிப்பதாகவும் மற்றும் புண்படுத்துவதாகவும் உள்ளது என்று அறிவித்தார். அந்த விளம்பர பலகைகளை 24 மணி நேரத்துக்குள் அப்புறப் படுத்தாவிட்டால் பொது பல சேனா அதில் நேரடியாகத் தலையிட்டு அவற்றை அழித்துவிடும் என்று அச்சுறுத்தவும் செய்தார்.
அந்த விளம்பரப்பலகைகள் குறிப்பிட்ட அந்த இடத்தில் வைக்கப்பட்டிருப்பது எதனாலென்றால் அதற்கு மிகவும் அருகாமையில் இரண்டு மசூதிகள் அமைந்துள்ளபடியினாலேயே. ஒன்று பரக்காஹதெனியா பெரியா ஜூம்மா பள்ளிவாசல் மற்றது தௌகீட் ஜமாத்தினது புதிய ஜமியத் தௌகீட் ஜூம்மா பள்ளிவாசல் என்பனவே அவைகள். அந்த விளம்பரப்பலகைகள் பள்ளிவாசல் நிருவாகத்தினரால் அமைக்கப்பட்டவை அல்ல. அவை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் தமது சொந்தச் வரவு செலவு திட்டத்தின்கீழ் 22,000 ரூபா செலவில் அமைக்கப்பட்டவை. நாட்டிலுள்ள சகல நெடுஞ்சாலைகளுக்கும் பொறுப்பாகவுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் பிரார்த்தனை நடத்தும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக அவ்வாறு செய்திருந்தது. அப்படிச் செய்தது எதற்காகவென்றால் அந்த வழி செல்லும் வாகனங்கள் தேவையில்லாமல் சப்தம் எழுப்புவதை தவிர்ப்பதற்காகவே. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள் அந்த இடத்தை கடக்கும்போது அமைதியை கடைப்பிடித்து வருகிறார்கள். இதுதான் காவியுடை பாசிசவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது போலத் தெரிகிறது.
பரக்காஹதெனியா விளம்பரப்பலகைகள் அகற்றப்பட வேண்டும் என்கிற ஞ}னசார தேரரின் ஆத்திரமூட்டும் கோரிக்கையை கேட்கும், புத்தியுள்ள எந்த மனிதனும் ஒரு மூர்க்கமான பைத்தியம் ஆத்திரத்துடன் பேசுகிறது என்று அதை ஒதுக்கித் தள்ளியிருப்பார்கள். ஆனால் ஸ்ரீலங்காவில் சட்டத்தினதும் ஒழுங்கினதும் பாதுகாவலர்களான காக்கியுடை தரித்தவர்கள் அப்படிச் செய்யவில்லை. சமீபத்தில் நடந்துள்ள சம்பவங்கள் யாவும் ஸ்ரீலங்கா காவல்துறையினர் பொது பல சேனா - சிஹல ராவய - ராவண பலகாய போன்ற சக்திகள் பொதுவாக மத சிறுபான்மையினரை , அதிலும் குறிப்பாக இஸ்லாமிய விசுவாசிகளை இலக்கு வைத்து தாக்கும்போது அந்த சக்திகளின் கூட்டாளிகள் போல செயற்பட்டு வருகிறதையே தெரிவிக்கின்றன. காவல்துறையினரின் இப்படியான வெறுப்பூட்டும் நடவடிக்கைகள் தெரிவிக்கும் ஒரு காரணம் இந்த பாசிச இனத்துவேஷ மதவாதிகள் பாதுகாப்பு நிறுவனத்தின் உயர் மட்டத்தினரது முழு ஆதரவையும் அனுபவித்து வருகிறார்கள் என்கிற கருத்தையே பிரதிபலிக்கிறது.
மாவத்தகம
ஞ}னசார தேரர் விடுத்த 24 மணிநேர காலக்கெடு முடிவதற்குள்ளேயே காவல்துறையினர் அவரது கோரிக்கையை உடனடியாகச் செயல்படுத்த எடுத்த நடவடிக்கையின் பின்னணியில் என்ன காரணமோ அல்லது நோக்கமோ இருந்ததோ தெரியவில்லை. மாவத்தகம காவல் நிலைய தலைமை கண்காணிப்பாளரது தலைமையின் கீழ் காவல்துறை ஊழியர்களைக் கொண்ட ஒரு காவல்துறைப் பட்டாளம்,ஆகஸ்ட் 12 ந்திகதி திங்களன்று காலை சுமார் 10 மணியளவில் விளம்பரப்பலகைகள் நிறுவப்பட்டிருந்த இடத்தில் வந்திறங்கியது. அவர்களது நோக்கம் பொது பல சேனா கேட்டுக் கொண்டபடி அந்த விளம்பரப்பலகைகளை அப்புறப்படுத்துவது அல்லது அழிப்பது என்பதாக இருந்தது.எந்த அதிகாரத்தின்கீழ் காவல்துறையினர் அப்படி செய்யத் தயாரானார்கள் மற்றும் அவர்கள் ஏதாவது உயர்மட்ட அதிகாரிகளின் பணிப்புரைகளின் கீழ் இயங்கினார்களா என்பது தெரியவில்லை.
மிகப் பெரிய முஸ்லிம் சனத்தொகையை கொண்ட ஒரு இடம் பரக்காஹதெனியா ஆகும். காவல்துறையினர் அந்த இடத்துக்கு வந்திறங்கிய உடனேயே செய்தி விரைவாக எல்லா இடத்துக்கும் பரவியது. சில நிமிடங்களுக்குள்ளேயே முஸ்லிம்களைக் கொண்ட பெரிய கூட்டம் அங்கு கூடிவிட்டது. காவல்துறையினர் செயற்படவிருந்த செயலுக்கு எதிராக அவர்கள் தீவிரமாக எதிர்ப்புக் காட்டியதுடன் பொது பல சேனாவின் கட்டளையை நிறைவேற்ற காவல்துறையினரை தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்கள். உள்ளுர் அதிகார அரசியல்வாதிகள் பலரும் அங்குவந்து மக்களின் எதிர்ப்புக்கு தங்கள் ஆதரவையும் சேர்த்துக் கொண்டார்கள்.
அந்த விளம்பரப்பலகைகளை அகற்றுவதற்குரிய அனுமதியை காண்பிக்கும்படி காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.செம்மறியாடுகள் தலையசைப்பதைப்போல தங்களிடம் அனுமதிப் பத்திரம் எதுவுமில்லை என்று ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், ஆனால் சமாதானத்துக்கு பங்கம் ஏற்படக்கூடிய சாத்தியங்களை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதாகத் தெரிவித்தார்கள். உடனே கூட்டத்திலிருந்த இளைஞர்கள் சிலர், காவல்துறையினர் விளம்பரப்பலகைகளை தொட்டால் உடனடியாகவே சமாதானத்துக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்று கோபத்துடன் கூக்குரலிட்டார்கள். அவர்கள் அந்தக்கணமே முஸ்லிம் பெரியவர்களால் எச்சரிக்கப்பட்டு மௌனமாக்கப் பட்டார்கள். ஏராளமான முஸ்லிம்கள் பாதுகாப்பாக விளம்பரப்பலகைகளை சூழ்ந்து நின்று கொண்டதால்,தங்களையும் விஞ்சி நிற்கும் அந்தக் கூட்டத்தைக் கண்டு காவல்துறையினர் நம்பிக்கையற்றவர்களானார்கள்.
அதிகாரமளித்தல்
அத்துடன் காவல்துறையினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே வார்த்தை பரிமாற்றங்களும் இடம் பெற்றன, மசூதி நிருவாகத்துக்கு பொறுப்பானவர்கள்தான் முறையான அனுமதியில்லாமல் சட்டத்தைமீறி தன்னிச்சையாக அந்த விளம்பரப்பலகைகளை வைத்திருக்கிறார்கள் என்கிற தப்பான எண்ணத்தையே காவல்துறையினர் கொண்டிருந்தனர். மசூதி நிருவாகம் அதற்குப் பொறுப்பில்லை வீதி அபிவிருத்தி அதிகாரசபை முறையான சட்ட விதிகளின்படி அதை அமைத்துள்ளார்கள் என்று காவல்துறையினருக்கு உணர்த்தப்பட்டது. அனுமதியில்லாமல் விளம்பரப்பலகைகளை அகற்றுவது சட்டவிரோதம் என பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. காவல்துறையினர், மசூதி நிருவாகத்தினரது சம்மதத்துடன்,வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரின் முறையான அனுமதியைப் பெற்றால் பரக்காஹதெனியா பொதுமக்கள் அந்த விளம்பரப்பலகைகளை அகற்றுவதை தடுக்கமாட்டார்கள் என்று முஸ்லிம் பெரியவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தார்கள்.
அந்தக் குறிப்பை கேட்ட காவல்துறையினர், ஒருவேளை தாங்கள் சட்டத்துக்கு அதிகமாக நடக்கிறோம் என்பதையும் மற்றும் தங்களுக்கு அங்கு வேலை எதுவுமில்லை என்பதையும் உணர்ந்து அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள். மக்களும்கூட அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள், ஆனாலும் சில இளைஞர்கள் ஒருவேளை காவல்துறையினர் திரும்பி வந்தாலும் என்று ஐயுற்று முக்கியமான இடங்களில் கண்காணிப்புக்காக நின்று கொண்டார்கள்.
விக்கிரமசிங்க
பின்னர் திங்கள் இரவு 8 மணியளவில் மாவத்தகம பிரதேசசபை அங்கத்தவர் தசீம் அவர்களின் இல்ல வளாகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின ;(யு.பி.எப்.ஏ) தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், மாவத்தகம தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(எஸ்.எல்.எப்.பி) அமைப்பாளருமான நிரஞ்சன் விக்கிரமசிங்காவும் கலந்து கொண்டிருந்தார். குருநாகல எஸ்.எல்.எப்.பி அமைப்பாளரான அப்துல் சத்தாரும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.
தேவையில்லாமல் ஏற்பட்ட அசௌகரியத்துக்காக நிரஞ்சன் விக்கிரமசிங்கா மக்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, அந்த விளம்பரப்பலகைகள் அகற்றப்பட மாட்டா என்கிற உத்தரவாதத்தையும் வழங்கினார். தான் காவல்துறையினரை இந்த விடயம் சம்பந்தமாக தொடர்பு கொண்டு அந்த விளம்பரப்பலகைகளை அகற்றுவதற்கான மேற்கொண்டு நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒருவேளை பொது பல சேனா பரக்காஹதெனியாவுக்குள் ஆக்கிரமிப்புச் செய்து விளம்பரப்பலகைகளை சேதப்படுத்த முயற்சிக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டதுக்கு,விக்கிரமசிங்க பதிலளிக்கையில் அந்தப் பலகைகளை பாதுகாப்பதற்காக காவல்துறையினர் அந்த இடத்தில் நிறுத்தப்படுவார்கள் என உறுதியளித்தார். உண்மையில் இது மிகவும் வஞ்சiயானது,ஏனென்றால் ஞ}னசார தேரரின் உத்தரவுப்படி விளம்பரப்பலகைகளை அகற்றுவதற்கு முயன்ற அதே காவல்துறையினரே இப்போது அந்த விளம்பரப்பலகைகளுக்கு பொது பல சேனாவினால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பார்கள் என்று சொல்லுவதுதான்.
இப்படியாக பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தின் நவீன அத்தியாயம் ஒருவாறு நிறைவடைந்தது. ஆனால் இதன் பின்னால் மற்றொரு கதை உருவாகிறது, ஒரு காலத்தில் தம்மதீப என விபரிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நாட்டில், சமாதானத்தையும் மற்றும் இன நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதற்காக யுத்தம் நடத்தும் பாசிச மதவாத இனவாதிகளுக்கு அமைதி காக்கும்படி கோரிய விளம்பரப்பலகைகள்கூட இப்போது எதிரியாகத் தோன்றுவதுதான் அந்தப் புதிய கதை. தேனீ மொழிபெயர்ப்பு:; எஸ்.குமாh

DEAR BROTHERS NOW DONT BELIWE ANY POLITISION.BE CARE FULL.POLICE COURT ALL OF NOW BBS HAND.WHAT EVER THEY NEED.THEY WILL DO IT.
ReplyDeleteசரிதான்.. அந்த முஸ்லிம் ஆசிரியர் இந்த விளம்பரப்பலகையை சேதப்படுத்திதட்காக கைதானார் என்ற உங்கள் செய்தி என்னாச்சு?
ReplyDelete