ஒரு தந்தையின் அழுகுரல்..!
“அஸ்மா” இவர் பெற்றெடுத்த ஒரேயொரு குழந்தை
ஈரெட்டு வயது பூர்த்தியான விடலை
ஆனபோதும்.......
கொல்லப்பட்ட பிள்ளையின் தந்தையாக பேசவில்லை
தன் சமுதாயத்தின் தலைவனாக பேசினார் கதறினார்
இந்த இடத்தில் இவரின் ஓலம் எதிரிகளுக்கு சங்கு
அநீதிக்குட்பட்டவன் பிரார்த்தனை மறுக்கப்பாடாத மகஜர்
யுத்தம் இல்லை ஆயுதம்கூட குத்தவில்லை
தந்தையின் ஒப்பாரி கேட்டு நொந்துவிட்டேன்
இவர் பேச்சுக்களை நான் விரும்புவதில்லை
இவர் கதறினார் ஆச்சர்யம் அழுதுவிட்டேன்
அநீதியை மறுக்க மதமோ மார்க்கமோ தேவை இல்லை
மனிதாபிமானம் உள்ள உள்ளங்கள் போதும்
அநீதிக்கு எல்லை உண்டு
பொறுமைக்கு சன்மானம் உண்டு
அஸ்மாவுக்காக அதிகம் பிரார்த்திப்போம்
அதைவிட அவளை இழந்த “பல்தாஜி”க்காகவும்தான்
அஹ்மத் ஜம்ஷாத்
Cairo- Egypt

HASBUNALLAHU WA NIAMAL WAKEEL
ReplyDelete