Header Ads



முஸ்லிம் அதிகாரிகளின் வருகைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு

வடக்கு மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களில் தலைமைதாங்கும் சிரேஷ்ட உ த்தியோகத்தர்களாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் வரவழைக்கப்படுகின்றமைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

விடயம் தொடர்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் அதற்கு வெளியேயும் வாக்களிப்பு நிலையங்களில் தலைமை தாங்கும் தகுதியுள்ள அதிகளவான சிரேஷ்ட தமிழ் அதிகாரிகள் உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலிருந்து எதற்காக அதிகாரிகள் வரவழைக் கப்படவேண்டும்?

அதுவும் சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் எதற்காக வரவழைக்கப்படுகின்ர்கள்?

எனவே இந்த அதிகாரிகளின் வருகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கடுமையான சந்தேகம் கொ ண்டிருக்கின்றது. ஒருவேளை அரசாங்கத்திற்கு ஆதரவாள அதிகாரிகளை அழைத்து வ ந்து கபடத்தனமான தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிடலாம்.

ஏனெனில் இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் அந்த அதிகாரி எடுப்பதே இறுதியான முடிவு. அந்த நிலையில் கொண்டுவரப்படும் அதிகாரிகள் எதற்காக கொண்டு வர ப்படுகின்Ùர்கள் என்பது எங்கள் கேள்வி, சிலவேளை இறுதி நேரங்களில் கள்ள வா க்குகளை கூட யாரும் போடலாம். அவ்வாறு போட்டால் அங்குள்ள  ஏனைய அதிகாரிகள் வாய் மூடி இருக்கவேண்டும். எனவே இவ்வான விடயங்களை தேர்தல் ஆணையகம் மேற்கொ ள்வதை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதை நாம் தேர்தல் ஆணையகத்திற்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

தமிழ் உத்தியோகத்தர்கள் உள்ளபோது தமிழ் தெரியாதவர்களை கொண்டுவருவது எதற்காக? அரசுக்கு சாதகமாக இருக்கும் ஊழியர்கள் என்ற சந்தேகம் எமக்குள்ளது. அம்பாறை சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட ஒரு மாவட்டம். அந்த மாவட்டத்திலிருந்து அதிகாரிகளை கொண்டுவருவது பல இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

மேலும் யாழ்.கோப்பாய், இருபாலை பகுதிகளில் வீடு வீடாகச் செல்லும் சிலர் வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப படிவங்களை வழங்குகின்Ùர்கள். அதன் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படுமாம். எனவே இவ்வாÙன விடயங்களை தேர்தல்கள் திணைக்களம் உடனடியாக நிறுத்தவே ண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

2 comments:

  1. சிங்கள அதிகாரிகளுக்கு தமிழ் தெரியாது சரி முஸ்லிம் அதிகாரிகளிற்குமா தமிழ் தெரியாது.இதன் மர்மம்தான் என்ன?

    ReplyDelete

Powered by Blogger.