Header Ads



பாபரி மஸ்ஜித்தை நோக்கி விஸ்வ ஹிந்து பரிசத் பாத யாத்திரைக்கு ஏற்பாடு


அயோத்தியிலிருந்து 24-08-2013 திட்டமிட்டபடி யாத்திரை துவங்கும்' என, விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், பிடிவாதமாக தெரிவித்துள்ளதால், அந்த அமைப்பைச் சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு எதிராக, உ.பி., பைசாபாத் மாவட்ட நிர்வாகம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. பரிஷத் தலைவர், அசோக் சிங்கால், அலகாபாத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, நாளை முதல், செப்டம்பர், 13ம் தேதி வரை, 84 கி.மீ., தூரத்திற்கு, அயோத்தியிலிருந்து யாத்திரை மேற்கொள்ள, விஸ்வ இந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.

ஆறுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வழியாகச் செல்லும், இந்த சவுராசி கோசி யாத்திரைக்கு, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், "திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறும். அதைத் தடுக்க முற்பட்டால், ஏற்படும் விளைவுகளுக்கு மாநில அரசே பொறுப்பு' என, பரிஷத் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு எதிராக, அயோத்தியை ஒட்டிய, பைசாபாத் மாவட்ட நிர்வாகம், நேற்று கைது வாரன்ட் பிறப்பித்தது. நேற்றிரவு வரை, இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; சிலர் தலைமறைவாகி விட்டனர்.பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால், அலகாபாத்தில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை நகரங்களான, அயோத்தி மற்றும் பைசாபாத்தில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.