மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற சம்மேளனம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம்
(இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்)
எதிர்வரும் வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற சம்மேளனம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தின் முழுமையான விபரங்களை இங்கு தருகின்றோம்.
அன்பின் சகோதர,சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும்…..
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவித்தல்கள் வெளியாகியுள்ளதை வாக்காளர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.இந்த தேர்தல் வடமாகாண முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமானதொரு தேர்தல் என்பதையும் உங்களால் உணர்ந்து கொள்ள முடியும் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.இந்த தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அலிகான் ஷரீப்,எம்.அமீன்,றிப்கான் பதியுதீன் ஆகியோராவர்.
இன்றைய எமது மாவட்ட மக்களது செயற்பாடானது காத்திரமான தீர்மானங்களை எடுக்க வேண்டியது என்பதை ஆழமாக எமது உள்ளங்களில் இருத்திக் கொள்ள வேண்டியுள்ளது.1990 ஆம் ஆண்டு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்டோம் என்பதை மீண்டும் ஒரு முறை பாரக்க வேண்டியுள்ளது.இந்த வெளியேற்றத்தின் போது எமது பெற்றோர்கள்,மற்றும் வயோதிபர்கள்,கர்ப்பிணித் தாய்மார்கள்,சிறுவர்கள் அனுபவித்த வேதனைகள் இன்றும் எமது கண்முன் அழியாக்காட்சிகளாக உள்ளன.அது மட்டுமல்லாது,எமது வெளியேற்றம் எமக்கு ஏற்படுத்தியுள்ள இழப்புக்கள் ஏராளம் என்பதை நாங்கள் சொல்லித் தான் நீங்கள் தெரிய வேண்டியதில்லை.சொத்துக்களையும்,உடமைகளையும்,உரிமைகளையும்,இழந்தவர்காளக ஒவ்வொருவரும் இருக்கின்றோம்.இவ்வாறனதொரு நிலையில் எமது மாவட்டத்தில் எமக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுக் கொள்ள தடையாக இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
இவ்வாறானதொரு நிலையில் வடக்கு மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களாகிய நாங்கள் எமது மண்ணுக்கு மீள்குடியேற செல்கின்ற போது,வெளிமாவட்ட மக்களாக எம்மை காண்பிப்பதுடன்,எம்மை ஊடகங்கள் மூலம் அவமானப்படுத்தும் கைகங்கரியத்தையும் செய்துவருவதை காணமுடிகின்றது.கடந்த 20 வருட அகதி வாழ்க்கையின் வேதனையினையும்,வலியினையும் சுமைகளாக சுமந்து கொண்டுவாழும் ஒரு சமூகத்தின் மீள்குடியேற்றத்தினை முன்னெடுக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை ஒரு இனவாதியாக காண்பிக்கும் அநியாயத்தை சிலர் தொடர்ந்தேச்சையாக செய்துவருகின்றனர்.இந்த தடங்கள்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் இரவென்று பகலென்று பாராது,எமது முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்திற்காக பணியாற்றும் அமைச்சரின் கரங்களை கட்சிகளுக்கும்,குறுகிய சிந்தனைகளுக்கும் அப்பால் நின்று வெற்றி பெற வைக்க வேண்டியது எமது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.
அன்று மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி முஸ்லிம்களது மீனவக் காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.அதனை நியாயத்தின் அடிப்படையில் முஸ்லிகளுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சித்த போது,அமைச்சர் றிசாதுக்கு எதிராக புனையப்பட்ட சாட்சிகளை கொண்டு அவரை நீதி மன்றில் தலைகுணிய வைத்த காட்சிகள் மட்டுமன்றி,52 முஸ்லிம் சகோதரர்களை பல மாதங்களாக சிறைவாசம் அனுபவிக்க செய்ததை நாம் மறந்து விட முடியுமா?
இவ்வாறான துரோகத்தனங்களும்,முஸ்லிம் எதிர் சிந்தனைகளும் அதிகரித்துவந்த போது,அவற்றுக்கு சவாலாக நடை பெற்று முடிந்த உள்ளளுராட்சி சபை தேர்தலில் அதனது ஆட்சிகளை ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்று முஸ்லிம் தலைமைகள் இந்த சபைகளை ஆட்சி செய்ய கிடைக்கவிருந்த சந்தர்ப்பங்களை இல்லாமல் ஆக்கிய பெருமையினையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டுள்ளதை இந்த தருனத்தில் நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது.மன்னார் பிரதேச சபை,செட்டிக்குளம் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை என்று பட்டியலிட்டுக் பறிபோன சபைகளின் பெயர்களை எம்மால் பட்டியலிட்டு கூறலாம்,ஒரு சில எண்ணிக்கையிலான வாக்குகளின் வித்தியாசத்தில் இந்த சபைகளை நாம் இழக்க நேரிட்டது.இன்றும் அவ்வாறான ஒரு நிலையினை தோற்றுவிக்க அன்று தேர்தல் காலத்தில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்தவர்கள் இன்றும் அதே பணியினை ஆரம்பித்துள்ளதை மக்கள் அவதானத்துடன் நோக்க வேண்டியுள்ளது.
எமது மாவட்ட மக்களது விடிவினையும்,எதிர்காலத்தினையும்,கடந்த காலங்களில் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும் எமக்கிடையில் ஒரு கட்டுக்கோப்பான ஒற்றுமையின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பத்தை இறைவன் ஏற்படுத்தி தந்துள்ளான்.அந்த சந்தரப்பத்தை நாம் சரியாக பயன்படுத்த தவறுவோமெனில் மீண்டும் எமது மீள்குடியேற்றத்துடன் கூடிய இறுப்பானது கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் தற்போது எம்மில் எற்பட ஆரம்பித்துள்ளது.எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் எமது மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் எமது இலக்கை அடைந்துகொள்ள முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
எனவே அமைச்சர் றிசாத் பதியுதீனின் தெரிவில் களம் இறங்கி இருக்கும்மேற்குறிப்பிட்ட வேட்பளார்களின் வெற்றிக்கு பாடுபடுவதுடன்,வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் எமது மாவட்டத்தில் மேலும் எமது சமூகத்தின் வாழ்வுரிமையினை தக்க வைத்துக் கொள்ள அனைவரும் திடசங்கற்பம் பூனுவோம்.
மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற சம்மேளனம்
மன்னார்.
.jpg)
Post a Comment