பசில் ராஜபக்ச பொதுமன்னிப்புக் கோரியுள்ளார்
சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய, ரதுபஸ்வல பொதுமக்கள் தாக்கப்பட்டதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பொதுமன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிர்களையும், உடமைகளை இழந்தவர்களுக்கும் அவர் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது கடமையைச் செய்ய முயன்ற பல ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்கள் துரதிஸ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களால் மன்னிக்கப்பட முடியாதது என்றும் அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், எந்த வகையினும் இத்தகைய நடவடிக்கையைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட தொழிற்சாலை உடன்பாட்டை மீறியிருந்தால் மக்களின் விருப்பத்துக்கமைய, அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதுவரை, வெலிவேரிய தாக்குதலை, அரசாங்கம் தற்காப்புக்கான தாக்குதல் என்றும், அடையாளம் தெரியாத குழுவொன்றின் சதி என்றும் கூறிவந்தது. முதல் முறையாக பசில் ராஜபக்ச இதற்காக பொதுமன்னிப்புக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப சார்பில் மன்னிப்புக்கோரியுள்ளார்
ReplyDeleteதனது குடும்பசார்பில் மன்னிப்புக்கோரியுள்ளதுடன் ,தான் நல்லபிள்ளை எனவும் தெரிவித்துள்ளார்
ReplyDeleteNiga thaan solrinka mannippu ketkirar enru . ithil
ReplyDeletemannippu enra solley illai...! WAAL PIDIKKIRINKALA ninkal?
இன்னுமா பதவியில் இருக்கிறீர்களா பஷில் ஷார் மக்களுக்கு அபிவிருத்தி எனறு சொன்ன நீங்க இப்படித்தான்யா அபிவிருத்தி என்று சொல்லவில்லையே
ReplyDelete