Header Ads



முஸ்லிம் காங்கிரஸினை பிளவுபடுத்த முயற்சி - ரவூப் ஹக்கீம்

(vi) வடக்கு உட்பட மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனை வைத்து கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
 
இவ்வாறான குள்ளநரிகளின் தந்திரத்திற்கு அஞ்சுகின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்காது எமது கட்சியின் ஒற்றுமையை விலைபேசி மாற்றுத்தரப்பிற்கு அங்கத்தவர்களை தாரைவார்த்துக்கொடுக்கின்ற சில சகுனிவேலைகள் கட்சிக்குள்ளேயே இடம்பெறுகின்றன என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருக்குமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
 
வடக்கைப் பொறுத்தமட்டில் இந்தத்தேதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிக பெரும்பான்மையை பெறும். அந்த அடிப்படையில் நாம் தனித்து போடியிடுவதால் பெரிய அரசியல் சாகசங்களைச் செய்யப்போவதில்லை.
எமது முடிவினால் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸை அரச தரப்பில் இணைத்துக்கொண்டு எங்கள் முதுகில் சவாரி செய்து தங்களுடைய உறுப்பினர்களை அதிகரிக்க அரசதரப்பு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முயற்சித்தார்.
 
அதற்கு உடந்தையாக அரச தரப்பில் அபிவிருத்தி அமைச்சர் ஒருவரும் ஒத்தாசை வழங்கினார். இவை அனைத்தும் எங்களை பலவீனப்படுத்துவதற்காஅன முயற்சியின் அங்கமாகத்தான் அரங்கேறுகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

9 comments:

  1. இது எல்லோருக்கும் தெரியும் , இதற்கு எதிரான உங்களின் நடவடிக்கை என்ன , சகுனிகள் கடைசிமட்டும் சுகம் அனுபவிக்க நீங்கள் இடம் கொடுக்கின்றீர்கள் .

    ReplyDelete
  2. You are not different from them. You are selling Muslims’ votes to government at wholesale basis after winning some members’ seats. SLMC is acting as an interim broker who gets the Muslims’ votes in the name of Islam and sell them to major parties for their personal benefits. In this situation only the SLMC is benefited. General public get nothing neither from SLMC nor from major patties. Major parties are not obliged to look after us as we don’t vote for them.
    If general public directly link with major parties, at least they can approach major parties to fulfill their needs and get it done.

    ReplyDelete
  3. அபிவிருத்திஅமைச்சர் என்று வெட்கமில்லாமல்சொல்கிறீர்களே
    கிழக்கு தன் மைந்தர்களைவிட்டுவிட்டு உமது கதையைக்கேட்டு தன் மைந்தர்களையே தூற்றிக்கொண்டு உமக்கு சுகபோக வாழ்வு தந்த கிழக்குக்கு நீங்கள் செய்த அபிவிருத்;தி என்ன?
    இப்படிக்கேட்டால் 'நாம் அபிவிருத்தி செய்யும் துரோகிகளல்ல. உரிமை வென்றுவரும் தியாகிகள்' என்பீர்கள்
    எங்கே இந்த 13 வருடமும் நீங்கள் வென்றுவந்த உரிமைகளை சற்று பட்டியலிடுங்கள். நான் நீங்கள் உரிமைகளை விற்றுப்பிழைத்த பட்டியலைத்தருகிறேன். உங்களுக்கு அபிவிருத்தி செய்யத்தெரியாது. அல்லது அபிவிருத்தி செய்ய விரும்பவில்லை என்ற பலவீனத்தை மறைக்க 'அபிவிருத்தி அமைச்சர்' கதை சொல்கிறீர்கள். இது எத்தனை காலத்துக்கு?
    கட்சியை கூறுபோட சதி நடக்கிறது என்கிறீர்களே...
    தலைவர் அஸ்ரப் இருக்கும் போது இப்படி பிரிந்து கொண்டு போய் கட்சியமைத்தார்களா அமைத்தாலும் வென்றார்களா? நீங்கள் இந்த கட்சியை பொறுப்பேற்றபின்பு தானே இத்தனை பிளவுகள். அப்படியென்றால் கட்சி சீரழிவதற்கு பிரிந்து செல்பவர்கள் மட்டும் தானா காரணம். புpரியக்காரணமான நீங்கள் காரணம் இல்லயா?
    நான் அல்ல. அமைச்சு ஆசைதான் காரணம் என்று சொல்லாதீர்கள்.
    'பிடரிபிடித்துத் தள்ளினும் போகேன்' தன்னிலை மறந்து சொல்லுமளவு அமைச்சின் மீது அமாறா உள்ளவர் நீங்கள். சுகபோக மல்ல. கட்சிதான் முக்கியம் எனச் சொல்லும் நீங்கள் கட்சியை விட்டு வெளியேறிப்பாருங்களேன். அப்படி என்ன கெடப்போகிறது எனப்பார்ப்போம்? இதுவரை உள்ள சீரழிவைவிடவுமா?

    ReplyDelete
  4. தலைமைத்துவத்துக்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது.வடக்கு முஸ்லிம்களுக்கு எதனை பெற்றுக் கொடுத்தீர்கள்,அமைச்சர்் றிசாத் மட்டும் தான் பிழையானவர்..நீங்கள் காட்டிக் கொடுக்கும் கும்பலின் தலைவர் என்பதை மறந்துவிடாதீர்கள்..

    ReplyDelete
  5. ரவூப் ஹக்கீம் அவர்களே,காலத்துக்கு ஏற்ற வேடம் தரிப்பதில் தங்களை மிஞ்சுவதற்கு எவரும் இல்லை.மஹிந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கின்றது என்றால் அந்த அமைச்சின் சால்வைக்குள் இருந்து கொண்டுத்து நீங்கள் பேசுவது நய வஞ்சத்தனம் தானே....வடக்கில் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெருவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அங்கு முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை எப்படியாவது பெற வேண்டும் என்று பணியாற்றும் அமைச்சர் ஒருவரின் முஸ்லிம் பிரதி நிதிகளை தோற்கடிக்க செல்வாக்கில்லாத தங்களது கட்சியின் பிரதி நிதிகளை தனித்து களம் இறக்கியிருப்பது,இந்த சமூகத்திற்கு செய்யும் அநியாயம்,இம்மையில் இல்லாவிட்டாலும்,மறுமையில் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.வடக்கில் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு இன்று 24 வருடங்கள் ஆகின்றன...அம்மக்களுக்கு எத்தனை மலசல கூடத்தை பெற்றுக் கொடுத்தீ்ர்கள்......எத்தனை வீடுகளை கட்டிக் கொடுத்தீர்கள்....குள்ள நரி வேறு யாருமல்ல அது தாங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. No body will try to devide the party because of you every body want leave the party If you really love the muslims and you want to fallow Ashraf way you should leave the party Thats my wish.Jinna

    ReplyDelete
  7. எமது கட்சியின் ஒற்றுமையை விலைபேசி மாற்றுத்தரப்பிற்கு அங்கத்தவர்களை தாரைவார்த்துக் கொடுக்கின்ற சில சகுனிவேலைகள் கட்சிக்குள்ளேயே இடம்பெறுகின்றன - SLMC தலைவர் ரவூப் ஹக்கீம்.

    அப்படியாயின் இப்போதே SLMC கட்சியின் வேட்பாளர்களது கால்களுக்கு கடிவாளம் இடுவது நல்லது.

    கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது அவ்வேட்பாளர்களுக்கு செய்தது போன்று.

    அக்கடிவாளத்தை உடைக்க முடியாமல் அவர்கள் (SLMCயின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்) இன்னும் உள்ளனர்.

    ReplyDelete
  8. evanai ellam serupala adikka aal illa than enakku kavala donkey entha timle etha patthi pesuthu

    ReplyDelete
  9. எரியும் எந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லை. கட்சி மட்டும் தான் கவலை.
    நீ எல்லாம் ஒரு தலைவர்.

    ReplyDelete

Powered by Blogger.