இலங்கையில் பால் உற்பத்திகளில் மனித உடலுக்கு தீங்காகும் நச்சுத்தன்மை
(ஜெஸா)
பால் மாக்களிலும் பால் உற்பத்திகளிலும் மனித உடலுக்கு அதிக தாக்கத்தை செலுத்தக் கூடிய நச்சுத்தன்மை காணப்படுவது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Dicyandiamide (DCD) என்ற இரசாயனப் பதார்த்தம் குறித்த சர்ச்சைகள் முதலில் எழுந்தன. குறிப்பாக நியுசிலாந்திலிந்து இறக்குமதி செய்யப்படும் பொன்டரா நிறுவன தயாரிப்புக்களான நான்கு பால்மா வகைகளின் மாதிரிகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கையின் ஆய்வு கூடங்களில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட மாதிரிகளில் DCD னுஊனு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவை மேலதிக பரிசோதனைக்காக வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு அனுப்பப்பட்டன.
இதற்கிடையில் சந்தையில் தமது வர்த்தக நாமத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பால்மா நிறுவனங்கள் ஈடுபட்டன. 100 & பாதுகாப்பானது என்ன வர்த்தக விளம்பரத்தை பொன்டரா நிறுவனம் வெளியிட்டது. மெலிபன் முதலான நிறுவனங்கள் அவுஸ்ரேலிய ஆய்வு கூட அறிக்கையினை பிரசுரித்தன. அது அவுஸ்ரேலிய பால்மா உற்பத்திகளில் எந்தவித இராசயனங்களோ இல்லை என்ற உத்தரவாதத்தை வழங்கின.
வெளிநாட்டு ஆய்வுகூடங்களில் டி.சீ.டி உறுதிப்படுத்தப்பட்ட கையோடு இன்னுமொரு சர்ச்சை தோன்றியுள்ளது. பால்மாக்களின் மாதிரிகளில் Way Protein காரணமாக உருவாகும் Clostridium Botulliuum பக்டீரியாக்கள் காணப்படுதாகவும் அவை உடலுக்கு மிக அதிகளவில் தாக்கம் செலுத்தக்கூடியன என்றும் தற்பொழுது எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னர் குறிப்பிட்ட பால்மாக்களுக்கான இறக்குமதி அனுமதி, விற்பனை அனுமதி, விளம்பரப்படுத்தல் என்பன ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
மேலும் தற்பொழுது சந்தைகளில் காணப்படும் பால்மாக்களை அகற்றுவதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொன்டரா நிறுவன உற்பத்திகளான அன்கர், ரத்தி, அன்கர் 110 முதலானவையும் மெலிபன், டயமன்ட் முதலான வியாபார நாமங்களும் சந்தையிலிருந்து உடனடியாக அகற்றப்படுகின்றன. (Anchor One Plus (Batch no.107610163) and Anchor
Full Cream Milk Powder (batch no.0605C0883), Maliban Non-Fat Milk (batch
no.13074A1) and Diamond Milk Powder (batch no. NW1F1PDX1)
பொன்டரா நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 48 மணித்தியாலத்துக்குள் சந்தையில் காணப்படும் தமது உற்பத்திகள் அனைத்தையும் அகற்றிக்கொள்வதாக அறிவித்துள்ளது.
பால்மாக்களின் விளம்பரங்கள் தொடர்பாக நுகர்வோர் அதிகார சபை இடைக்காலத் தடைஉத்தரவு ஒன்றினை பெற்றுள்ளது.
இதேவேளை இலங்கையின் ஆய்வு கூடங்களில் டீ.சீ.டீ யை பரிசோதிப்பதற்கான வசதிகள் இல்லை என்று பொன்டரா நிறுவனம் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்கு இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுனம் (ஐ.ரி.ஐ) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை பொன்டரா நிறுவனம் நிராகரிப்பதாக தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் வகையில் ஜ.ரி.ஜ நிறுவனம் பதில் வழங்கியுள்ளது.
2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் காலப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொன்டரா நிறுவனத்தின் உற்பத்திகளே இன்னமும் சந்தையில் விற்பனைக்கு உள்ளன என்றும் அவற்றில் அதிகளவில் டீ.சீ.டீ நச்சு இரசாயனம் கலந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. டீ.சீ.டீ உட்பட மெலமைன் முதலான இரசாயனங்கள் பரிசோதிப்பதற்கான ஆய்வுகூட வசதியும் தரம்வாயந்த ஆராய்ச்சியளர்களும் தமது நிறுனத்தில் காணப்படுவதாக ஜ.ரி.ஜ நிறுவனம் அறிவித்துள்ளது
பால்மாவில் மாத்திரமன்றி பால்மா வின் மூலம் உற்பத்தி செய்யப்படும் யோகட் பிஸ்கட் டொபி முதலானவற்றிலும் இவ்வாறான இரசாயனப்பதார்த்தங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் மா நிறுவனங்கள் பாலாடைகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாம் எண்ணையை கலப்பதாக மிக நிண்ட நாட்களுக்கு முன் எழுந்த குற்றச்சாட்டும் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் தங்களது விளம்பர வருமானங்கள் குறித்த அச்சத்தில் இதுவரை அடக்கி வாசித்தே வந்தன. நஞ்சு காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரும் கூட அதனை வெளியிட பல ஊடகங்கள் முன்வரவில்லை. அவை பால் மா நிறுவனங்களின் விளம்பரங்கள் இன்னமும் சூடுபிடிக்கும் என காத்திருந்த போது விளம்பரங்களுக்கான தடை உத்தரவின் பின்னர் பரவலாக ஊடகங்கள் இச்செய்தியை பிரசுரிக்கின்றன.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பால்மா வகைகளில் இதுவரை இவ்வாறான இராசயனப்பதார்த்தங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

islathil mattumthan izatku theervu ullathu ithatkahaththan Halalai Islam valiyuruthuhinrathu...
ReplyDelete