AirTel தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு பொத்துவில் மக்கள் எதிர்ப்பு
(ஹாலு ஹம்தா)
AirTel நிறுவனம் பொத்துவில் பிரதேசத்தில் தனது சேவையினை விஸ்தரிப்பு செய்வதற்கு மக்கள் செரிந்து வாழும் பழைய காதியார் வீதியில் ஆசிரியர் ஒருவருக்கு சொந்தமான காணியினை குத்தகைக்கு பெற்று தொலைத்தொடர்பு கோபுர நிர்மான ஆரம்பகட்ட வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது குறித்த கோபுரத்தால் சுற்றுச்சூழலுக்கும், குறித்த பகுதியில் வாழும் மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்த கல்வியாலர்களும், புத்திஜீவிகளும், நலன் விரும்பிகளும் மக்கள் வாழாத திறந்த வெளியில் குறித்த கோபுரத்தை நிருவுமாறும், தற்போது மேற்கொள்ளும் வேலையினை நிருத்துமாறும் ஜனநாய முறைப்படி தங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, கோபுர நிர்மானிப்பு இடைநிருத்தப்பட்டது.
22.08.2013ம் திகதி பொத்துவில் மக்களுக்கும், AirTel நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துறையாடல் நடைபெற்றது. அரசாங்க தொலைத்தொடர்பு அதிகாரிகளும், அரசாங்க சுகாதார அதிகாரிகளும் குறித்த நிறுவனம் சார்பாகவும், பொத்துவில் வைத்தியசாலை வைத்திய அதிகாரி Dr இஸ்ஸதீன், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி Dr சமீம் அவர்கள் பிரதேச சபை சார்பாகவும், உப தவிசாளர் தாஜிதீன், எதிர்கட்சித்தலைவர் பதுர்கான், பிரதேச சபை உறுப்பினர் அப்துல் மஜீத் போன்றவர்கள் எதிர்ப்பாலர்கள் சார்பாகவும் கலந்து கொண்டனர்.
Air Tel நிறுவனம் சார்பாக வருகை தந்த சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி வைத்தியர் அனல்ட் அவர்களின் விரிவுறை பிழையாகவும், பூரணமற்ற முறையிலும் இருட்டடிப்புச்செய்ப்பட்டு மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட போது மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. குறித்த வைத்திய அதிகாரி மக்களை வேறு பக்கமாக தனது கருத்தினால் திசைதிருப்ப முற்பட்ட போது குழப்பநிலை ஏற்பட்டு குறித்த கலந்துறையாடலில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் நிறைவிற்கு வந்தது.
குறித்த கூட்டத்தில் கழந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர்களிடம் “இவ்விடயம் தொடர்பாக ஆரம்பத்தில் ஒன்றுமே தெரியாதா? என வினவிய போது இறைவன் மீது சத்தியம் செய்து இது விடயமாக எங்களுக்கு ஒன்றுமே தெரியாதென கூறினர்”. தவிசாளர் அவர்களிடம் மேற்குறிப்பிட்ட விடயத்தை வினவிய போது “குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் உண்மைக்கு முறனாக கூறியுள்ளதாகவும், சபை உறுப்பினர்களின் பூரண ஒத்துலைப்பின் பின்னர்தான் குறித்த இடத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்”.
பிரதேச சபை உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்துகளானது மக்களை ஏமாற்றுவற்கு மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற சந்தேகமும் குழப்பநிலையும் தோன்றுகின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை தொடர்ந்து எதிர்பாருங்கள்.
.jpg)
Post a Comment