ஓட்டமாவடியில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம்
(அனா)
ஓட்டமாவடி மடுவத்து வீதியில் நேற்று (22.08.2013) கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் கொலையுடன் சம்மந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17.08.2013ம் திகதியில் இருந்து காணமல் போன செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த மீறாலெப்பை முஹம்மட் ஹிமாஸ் (வயது – 11) என்ற விஷேட தேவையுடைய இச் சிறுவனுடன் மாமா என்று பழகிய செம்மண்ணோடை பாடசலை வீதியைச் சேர்ந்த சாகுல் ஹமீட் அலி அக்பர் (வயது – 21) என்ற சந்தேக நபர் சிறுவன் காணமல் போன தினத்தில் இருந்து தலை மறைவானதினால் சிறுவனின் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவர்கள் வழங்கிய தகவலின் பேரில் வாழைச்சேனை பொலிசார் மேற்படி சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இக் கொலைச் சம்பவத்துடன் இன்னும் பலருக்கு தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரண விசாரனைகள் இடம் பெற்றதன் பின்னர் உறவினர்களிடம் ஜனாஸா மீறாவோடை முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் 23-08-2013 பிற்பகல் 04.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Post a Comment