9 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - 201 ஏற்றுக்கொள்ளப்பட்டன
(ஏ.எல்.ஜுனைதீன் + இர்ஷாத் றஹ்மத்துல்லா
மத்திய வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கு என சமர்ப்பிக்கப்பட்ட 210 வேட்பு மனுக்களில் 201 வேட்பு மனுக்கள் தேர்தல்கள் செயலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் 9 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன அரசியல் கட்சிகளின் 5 வேட்பு மனுக்களும் சுயேட்சைக் குழுக்களின் 4 வேட்புமனுக்களும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 அரசியல் கட்சிகள் மற்றும் 1 சுயேட்சைக் குழுவினதும் குருணாகல் மாவட்டத்தில் 2 அரசியல் கட்சிகளினதும் புத்தளத்தில் 1 அரசியல் கட்சியினதும் நுவரெலியா கிளிநொச்சி வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு சுயேட்சைக் குழுவினரினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மூன்று மாகாண சபகளுக்கும் 142 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு மொத்தமாக 3785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சார்பாக 2279 வேட்பாளர்களும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 1506 பேரும் இவ்வாறு போட்டியிடுகின்றனர்.
எதிர்வரும் வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட வேன்பு மனுக்களை தாக்கள் செய்த 13 அரசியல் கட்சிகளில் ஜாதிக சங்கவர்தன பெரமுனவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதுடன்,ஏனைய 12 அரசியல் கட்சியினதும்,11 சுயேட்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்ணான்டோ தெரிவித்தார்.
.இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த வேட்ப மனுத்தாக்கலினையடுத்து,வேட்பு மனுக்கள் மீள்பரிசீலனைக்குட்படுத்திய போது,ஜாதிக சங்வர்தன பெரமுனவின் வேட்பு மனுவில் ரப்பர் முத்திரை பதிக்கப்படாததினால் அது நிராகரிக்கப்பட்டது.
அது வேளை புத்தளத்தில் இன்று அரசியல் கட்சிகள் எற்பாடு செய்திருந்த ஊர்வலங்களை நடத்துவதற்கு பொலீஸார் அனுமதியளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment