Header Ads



சவூதி அரேபியாவின் 27 வயது வாலிபனின் உடலிலிருந்து 80 கிலோ கொழுப்பு அகற்றம்

சவுதியை சேர்ந்த ஓர் சிறுவன் 5 வயதான போது உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டான். அவனது எடல் எடையை குறைக்க பெற்றோர் பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை விதித்தும், நவீன சிகிச்சை அளித்தும் அந்த முயற்சிகளில் பலன் ஏதும் ஏற்படவில்லை.

மாறாக, தற்போது 27 வயது வாலிபனாக உள்ள அவரது உடல் எடை 250 கிலோவாக உயர்ந்து சராசரி மனிதரின் உடல் எடையை விட 3 மடங்காக அதிகரித்தது.

இதனையடுத்து, நடந்து செல்வதற்கு கூட சிரமப்பட்ட அவர் சக்கர நாற்காலியின் உதவியை நாட வேண்டியதாகி விட்டது. அவரது உடலின் எடை மேலும் அதிகரித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடக்கூடும் என டாக்டர்கள் எச்சரித்தனர்.

இந்த ஆபத்தை தவிர்க்க உடனடியாக அவசர ஆபரேஷன் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய டாக்டர்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

ரியாத்தில் உள்ள மன்னர் ஃபஹத் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இந்த எடை குறைப்பு ஆபரேஷனுக்காக வெளிநாட்டில் இருந்து விசேஷ கருவிகளை வரவழைத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெற்ற இந்த ஆபரேஷனின் மூலம் அந்த வாலிபரின் வயிற்றில் இருந்து 80 கிலோ கொழுப்பு அகற்றப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த ஆபரேஷனின் பின்விளைவாக அடுத்த 6 மாதங்களுக்குள் அவரது உடல் எடையில் மேலும் 60-70 கிலோ குறையும் எனவும் டாக்டர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.