Header Ads



எகிப்து எல்லையில் 25 பொலிஸார் சுட்டுக்கொலை


எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது முர்சி ராணுவ புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. கலவரத்தை அடக்க ராணுவம் சுட்டதில் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், சினாய் பகுதியில் காசா எல்லையோரம் உள்ள ரஃபா என்ற இடத்தின் வழியாக 2 பஸ்களில் போலீசார் இன்று சென்று கொண்டிருந்தனர். போலீசார் சென்ற பஸ்களை வழிமறித்த போராளிகள் பஸ்ஸை விட்டு போலீசாரை இறக்கி, அவர்களை தரையில் படுக்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலில் 25 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

1 comment:

  1. வழிமறித்தது போராளிகள்தான் என்படதுக்கு ஆதாரம்தான் உள்ளதா?இல்லை போராளிகளான இஹ்வான்கால் மீது பலி சுமத்தும் எண்ணத்தில் ஆட்சிபீடமே செய்து இருக்கலாமே?

    ReplyDelete

Powered by Blogger.