போகோ ஹராம் போராளி இயக்க தலைவர் சுட்டுக்கொலை - இராணுவம் அறிவிப்பு
ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளம் மிக்க நாடான நைஜீரியாவின் வடக்குப்பகுதியில் முஸ்லிம் ஷரியா சட்டத்தை வலியுறுத்தி போகோ ஹராம் போராளிகள் இயக்கம் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றது.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் அபுபக்கர் ஷெகாவ் தலைமையில் செயல்பட்டு வரும் இந்த போராளிகள் க தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவரின் தலைக்கு 7 மில்லியன் டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 25 - ஆகஸ்ட் 3 வரை நைஜீரியாவின் வட கிழக்கு பகுதி சாம்பிசா காட்டுப்பகுதியில் உள்ள போராளிகள் முகாம்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் அபுபக்கர் ஷெகாவ் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று ராணுவ புலனாய்வு தகவல் கூறுகிறது.
மேலும், போகோ ஹராம் இயக்கத்தின் இரண்டாம் நிலை கமாண்டரான அபுசாத் என்று அறியப்படுகிற மொமடு பாமாவும் கொல்லப்பட்டு விட்டார் என்று ராணுவம் அறிவித்துள்ளது.

Post a Comment