Header Ads



தாருல் ஹதீத் நிறுவனத்தின் 7 நாள் வதிவிட செயலமர்வு (தௌறாஹ்)

(பழுளுல்லாஹ் பர்ஹான்)

தாருல் ஹதீத் நிறுவனத்தினால்  வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இலங்கையிலுள்ள அரபிக் கலாபீடங்களைச் சேர்ந்த உயர்வகுப்பு மாணவர்களுக்கானதும், உலமாக்களுக்கானதுமான இலவச ஒரு வார கால கற்கை நெறிகள் அடங்கிய வதிவிட செயலமர்வொன்று(தௌறாஹ்)வழமை போன்று இவ்வருடமும்  காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக தாருல் ஹதீத் நிறுவனத்தின் பொறுப்பாளர் எம்.ஏ.சீ.ஏ.நாஸர் (ஜமாலி) தெரிவித்தார்.

இதில் சஊதி அரேபியாவிலுள்ள பிரபல்யம் வாய்ந்த பல்கழைக்கழகங்களில் கற்பிக்கின்ற பேராசிரியர்கள் கலந்து கொண்டு பாடங்களை நடாத்தவுள்ளதாகவும் குறித்த வதிவிட செயலமர்வு ஆகஸ்ட் 15ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் ஆகஸ்ட் 21ம் திகதி புதன்கிழமை வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கற்கை நெறியில் நாடளாவிய ரீதியிலுள்ள குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள அரபுக் கலாபீடங்களில் கல்வி பயில்கின்ற இறுதி வகுப்பு மற்றும் அதற்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்களுக்கான உணவு,மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.