Header Ads



SLRC காத்தான்குடிக் கிளையின் ஏற்பாட்டில் இலவச ஆயர்வேத வைத்திய முகாம்


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

அரசினர் ஆயர்வேத மருந்தகத்துடன் இணைந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளை நடாத்தும் இலவச ஆயர்வேத வைத்திய முகாம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் செஞ்சிலுவைச்; சங்க காத்தான்குடிக் கிளைக் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

காலை 08.30 மணியிலிருந்து மாலை 04.00மணி வரை இவ் வைத்திய முகாம் இடம்பெறவுள்ளது. இதில் பெருமளவிலான மக்கள் கலந்து பயன்;பெற்றனர்.இதன்போது நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான ஆயுர்வேத மருந்துக்களும் வழங்கப்பட்டன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் இலக்குகளில் மனிதாபிமான தொண்டர் பணி எனும் இலக்கின் கீழே குறித்த வைத்திய முகாம் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.