Header Ads



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 3 ஆவது சர்வதேச ஆய்வரங்கு ஆரம்பம்

(யு.கே.காலித்தீன் + பி. முஹாஜிரீன்)


மூன்றவது சர்வதேச ஆய்வரங்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

“நீடித்த அபிவிருத்திக்கு இன்று தோன்றியுள்ள சவால்களை ஆராச்சிகளுனூடாக எவ்வாறு எதிர்கொள்ளுதல்” எனும் தொனிப் பொருளில் இன்றும் (7,8) நாளையும் நடைறெவுள்ளது.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெறும் இவ்ஆய்வரங்குக்கு பிரதம பேச்சாளராக இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆணையாளர் கலாநிதி ஹேமச்சந்திர கலந்து கொண்டதோடு, சிறப்பு விருந்தினராக மாணியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் தவிசாளர் காமினி சமரநாயக்க கலந்து கொண்டு உறையாற்றினார்.

மேற்படி இவ்வாய்வரங்கில் வெளியிடப்பட்ட நூலினை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரிடம் ஆய்வரங்கின் இணைப்பாளர் கலாநிதி என்.டப்லியு.வி. வாலசூரிய வழங்கிவைத்தார்.

இந்தியா, மலேசியா, வங்கலாதேஸ், மற்றும் நேப்பால் ஆகிய நாடுகளில் இருந்து ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நிகழ்வான இன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், தினைக்களத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பதிவாளர், வளவாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


No comments

Powered by Blogger.