Header Ads



மொனராகலை மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்

(ஏ.எல்.ஜுனைதீன்)

    மொனராகலை மாவட்டத்திலுள்ள  11  பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 9 ஆயிரத்து 702 (2.2%) இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக் கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இம் மாவட்டத்தில் பிரதேச செயலக பிரிவு ரீதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் பற்றிய விபரம் வருமாறு,

பிரதேச செயலகம்
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
மெதகம
4912   பேர்
படல்கும்புர
1572   பேர்
வெல்லவாயா
1254   பேர்
பிபிலை
1008   பேர்
புத்தல
 456   பேர்
மொனராகலை
 410   பேர்
கதிர்காமம்
  50   பேர்
சியம்பலாண்டுவ
  25   பேர்
தனமல்வில
  07   பேர்
மதுள்ள
  04   பேர்
செவனகல
  04   பேர்
    இம்மாவட்டத்தில் மொத்தமாக 4 இலடசத்து 48 ஆயிரத்து 142 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
சமயம்
சனத்தொகை
வீதம்
பெளத்தம்
423648   பேர்
94.5%
இந்து
 12522   பேர்
 2.8%
இஸ்லாம்
  9702   பேர்
 2.2%
ரோமன் கத்தோலிக்கர்
  1508   பேர்
 0.3%
ஏனைய கிறிஸ்த்தவர்
   716   பேர்
 0.2%
ஏனைய சமயத்தவர்
    46   பேர்
  -


1 comment:

  1. இச் செய்தியில் கீழ் பந்தியில் சமய ரீதியாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும்( இஸ்லாமியர்கள் என்றிருப்பதற்கு பதிலாக) சனத்தொகை பற்றிய விபரம் வருமாறு எனத் திருத்தி வாசிக்குமாறு வாசகர்களை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.- ( ஏ.எல்.ஜுனைதீன் )

    ReplyDelete

Powered by Blogger.