பள்ளிவாசல் மீதான தாக்குதல் அநாகரீகமானது - அமைச்சர் றிசாத்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
மஹியங்கனை ஜூம்ஆ பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அநாகரிமான செயற்பாடுகள் குறித்து தாம் வண்மையாக கண்டனத்தை தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் மதத் தளங்களின் புன்னியத்தை சிதைக்கும் காரியங்களில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்.
பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த செயலானது முஸ்லிம்களை வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது.புனித நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் தமது மதக் கடமைகளை மிகவும் அமைதியாக செய்துவரும் இந்த நிலையில் இறை இல்லங்கள் மீது மீண்டும் காடையர்களின் தாக்குதல் சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இனந்தெரியாதவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் சிலர் தொடராக பள்ளிவாசல்கள் மீதும் மேற்கொள்ளும் இந்த செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் அனுமதியளிக்க முடியாது.எந்த மதத்தளங்கள் மீதும் எவருக்கும் தாக்குவதற்கு அனுமதியில்லை.அதனை மீறி மேற்கொள்ளப்படும் அநாகரிகமான செயற்பாடுகளை இனியும் கட்டப்படுத்தாமல் இருக்க முடியாது.
இது குறித்து பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment