Header Ads



கொழும்பில் ஹஜ் முகவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


(அஸ்ரப். ஏ. சமத்)

இலங்கையில் உள்ள ஹஜ் முகவர்கள் சிலர் இன்று 12-07-2013 வெள்ளிக்கிழமை மருதானை ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திய பாதைகளில்  ' ஹஜ் கோட்டாவில் அரசியல் தலையிட வேண்டாம், 'ஜனாதிபதியே இதில் தலையிட்டு நியாயமான முறையில் முஸ்லீம் திணைக்களப் பணிப்பாளர் ஊடாக ஹஜ் கோட்டாவை அமுல்படுத்துங்கள்.  என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ் வருடம் ஹஜ் கோட்டா 2260 பேருக்கு மட்டுமே சவுதி அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது. கடந்த வருடம் 2800 வழங்கப்பட்;டிருந்தது. இதுவரையும்  ஹஜ் முகவர்கள் நேர்முகத் தேர்வுக்கு  சமுகமாகி  68 முகவர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர். மேலும் 12 முகவர்கள் அமைச்சரினால் சேர்ககப்பட்டுள்ளது.   35 ஹஜ் முகவர்கள்  அத்தொழிலை செய்யமுடியாது வெளியே நின்கின்றோம். அதனால் தான் நாங்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றோம. என ஒரு முகவர் தெரிவித்தார்.  அரசியல் தலையீடு உள்ளதாலேயே இப்படி நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.  சில முகவர்களுக்கு 50, 45 எனக் பிரித்து கொடுத்துவிட்டு மீள அதில் 10,15 என பிரித்து எடுத்து வேறு முகவர்களுக்க வழங்கியுள்ளனர். எங்களை நம்பி எங்களிடம் ஹஜ்ஜ10_க்காக விண்ணப்பித்தவர்கள் ஏமாற்றம்மடைந்துள்ளனர். எனவும் தெரிவித்தனர். 

2 comments:

  1. இன்னும் என்னவெல்லாம் இஸ்லாத்தில் விற்பதற்கு உள்ளது ????????

    ஹஜ் என்ற ஒரு புனித கடமையை நிறைவேற்ற போவதற்கு என்னவெல்லாம் செய்கின்றனர் இதன் பெயரால் ........ இதில் வேற தாடி ஜுப்பா தொப்பி ...........அந்நியர்கள் கைகொட்டி சிரிக்கின்றனர்...கேவலம் கேட்ட எமது முஸ்லீம் சமூகம் ... இதில் வேற ஜனாதிபதி தலையிடவேண்டுமாம் .....வருவார் பார்த்துக்கொண்டு இருங்கோ இன்னும் இரண்டு ..... உடைக்க சொல்லிவிட்டு .....வெட்கம் கேட்ட .......

    ReplyDelete
  2. காதர் எங்கே பவுஸி எங்கே
    ஹஜ்விடயத்தை சிங்களவர் ஒருவருக்கு பாரம்சாட்டுவொம் அவர்கள் இதைவிட நல்லபடி செய்வார்கள்

    ReplyDelete

Powered by Blogger.